சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு சொந்தமான 190 இடங்களில் வருமான வரி ரெய்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

சென்னை: சசிகலாவின் உறவினர்களான விவேக், திவாகரன் உள்ளிட்டோர் வீடுகள் உள்பட 190 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து வருமான வரித் துறை அதிகாரிகள் குழுவினர் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன், தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீடு, ஜாஸ் சினிமாஸ், நமது எம்ஜிஆர் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தி வருகின்றனர்.

 IT raids in 20 places including Jaya TV, Vivek house

இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. மன்னார்குடி அருகே சுந்தரகோட்டையில் திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியிலும், அதன் ஊழியர்கள் வீடுகளிலும் ரெய்டு நடைபெறுகிறது.

தஞ்சாவூரில் சசிகலா அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேசன் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. சசிகலாவின் தம்பி வினோதகனின் மகன் மகாதேவன் வீட்டில் ஐடி ரெய்டு நடைபெறுகிறது. மகாதேவன் உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார்.

 IT raids in 20 places including Jaya TV, Vivek house

கூடலூரில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர் சஜீவன் வீட்டிலும் அவரது மர மில்களிலும் சோதனை நடைபெறுகிறது. சசிகலா உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு சொந்தமான சென்னை, பெங்களூர், தஞ்சாவூர், மன்னார்குடி, கோடநாடு, கூடலூர் உள்பட 190 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
IT raids in 20 places including Jaya TV, Jazz cinemas, Namadhu MGR in alleging tax evasion.
Please Wait while comments are loading...