தமிழகத்தில் முதல் முறையாக ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தை குறிவைத்து 190 இடங்களில் மாபெரும் ரெய்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக ஒட்டுமொத்தமாக ஒரு குடும்பத்தை குறிவைத்து 190 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை என்பது பொதுவான ஒன்றுதான். சர்ச்சைக்குரிய நிறுவனத்தில் ரெய்டுக்கு போனால் அதிகபட்சம் 10,20 இடங்களில் நடைபெறும்.

IT raids on Jaya TV office, Sasikala aides and 190 places

ஆனால் தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பத்தின் அத்தனை பேரையும் குறிவைத்து நாடு முழுவதும் 190 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இப்படியான மாபெரும் ஐடி நடவடிக்கை என்பது இதுதான் முதல் முறையாகும். சசிகலா குடும்பத்தின் போலி நிறுவனங்கள், வெளியே வராத பண்ணை வீடுகள் என அனைத்துமே இப்போது ரெய்டின் பிடியில் சிக்கியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Income Tax department is conducting raids at the premises of the Jaya TV in Chennai in connection with a case of alleged tax violation. In all 187 other places in TN are also being raided by the IT department.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற