ஜெயா டிவி, நமது எம்ஜிஆரை கைப்பற்றவா ஐடி சோதனை?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவியை சசிகலா குடும்பத்திடம் இருந்து கைப்பற்றத்தான் மிகப் பெரிய வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக தினகரன் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணி வசம் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையகம் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று முடிவடைந்த விசாரணையில் இரட்டை இலை ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

IT Raids target to take over Jaya TV, Namadhu MGR

இந்த நிலையில் திடீரென சசிகலா குடும்பத்தினர் நிர்வகித்து வரும் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளேடு உட்பட 160-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனை ஒட்டுமொத்தமாக சசிகலா குடும்பத்தினரை மிரள வைத்திருக்கிறது.

சென்னை, பெங்களூரு, தஞ்சாவூர், மன்னார்குடி கொடநாடு என சசிகலா குடும்பத்தின் சாம்ராஜ்யம் விரிந்து கிடக்கும் அத்தனை இடங்களிலும் நுழைந்துவிட்டது வருமான வரித்துறை. போலி நிறுவனங்கள் மூலம் அன்னிய செலாவணி மோசடியில் சசிகலா குடும்பத்தினர் ஈடுபட்டது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் அதிமுகவை தங்களது வசமாக்கிக் கொண்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கே ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சோதனை நடத்தப்படுவதாக தினகரன் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் நடத்திய பொதுக்குழுவில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆரை கைப்பற்றுவோம் என தீர்மானம் நிறைவேற்றியதையும் சுட்டிக்காட்டுகிறது தினகரன் தரப்பு.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran supporters said that IT Raids targetted to take over the Jaya TV and Namadhu MGR daily.
Please Wait while comments are loading...