டெங்குவை ஒழிக்க களம் இறங்குங்கள் உடன்பிறப்புகளே!... தீபா அழைப்பு!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெங்கு காய்ச்சலை ஒழிக்கவும் விழிப்புணர்வு திட்டங்களை நிகழ்த்தவும் தீபா பேரவை மற்றும் எம்ஜிஆர் அம்மா தீபா அணி நிர்வாகிகள் களத்தில் இறங்க வேண்டும் என தீபா அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் என்ற ஒரு காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் ஏராளமான குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் என பலியாகியுள்ளனர்.

J.Deepa calls her movement activists to work against Dengue

ஏடீஸ் என்ற ஒரு வகை கொசு டெங்கு வைரஸை பரப்படுவதால் உயிரிழக்கும் பாதிப்புகள் நிகழ்கின்றன. தமிழக அரசும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அரசியல் கட்சியினரும் தங்கள் சார்பில் மக்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை செய்ய அறிவுறுத்துகின்றனர்.

அந்த வகையில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா, தனது கழக நிர்வாகிகளுக்கு டுவிட்டர் பக்கத்தில் டெங்குவை ஒழிப்போம் என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கழக நிர்வாகிகள் டெங்குவை ஒழிக்க அவரவர் சார்ந்த பகுதி மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குவது, சுகாதார பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவற்றில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அத்துடன் டெங்கு பாதித்தால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பது குறித்தும் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழக மக்கள் டெங்குவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் பதிவிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
J.Deepa says that all the activists of her MGR Deepa Amma Peravai should involve in Dengue protection and awareness programmes.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற