படத்தை பார்த்து கூட எதிர்க்கட்சிகளுக்கு பயம் என்றால் அதுதான் ஜெயலலிதா... சொல்வது தீபா

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம்- வீடியோ

  சென்னை: படத்தை பார்த்து கூட பயம் ஏற்படுகிறது என்றால் அது ஜெயலலிதாவின்தான் என்பதையே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காட்டுகிறது.

  ஜெயலலிதாவின் படத்தை நாளை சட்டசபையில் திறந்து வைக்க தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் வைக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

  J.Deepa says that Opposition parties are afraid of even Jayalalitha's photo

  இதுகுறித்து தீபா தனது டுவிட்டரில் கூறுகையில், ஒரு பெண்ணாய் இருந்து பல சாதனைகள் செய்தவர். பல ஆண்களுக்கு மத்தியில் அரசாண்ட பெண். எதிர்க்கட்சிகளால் ஆட்பட்டவர். தனது எதிரி என்றாலும் தகாத வார்த்தைகளை உபயோகிக்காதவர்.

  ஒரு முதல்வர் எப்படி ஆளுமையுடன் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டு அவர்.

  அவரா குற்றவாளி. தன் அருகில் இருந்தவர்களால் குற்றவாளியாக்கப்பட்டார்.

  குற்றவாளி என்று எதிரிகளால் திணிக்கப்பட்டது. உடனே கூறுவீர்கள், நீதிமன்றம் சொன்னது என்று, அதே நீதிமன்றம்தான் பல மெகா ஊழல்களில் தடயங்கள் இல்லை என்றும் சொன்னது.

  அவர் என்றும் மக்கள் முதல்வர் , ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அம்மா என்ற சொல் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்...

  கடைசியில் ஒன்று தெரிகிறது படத்தை பார்த்து கூட பயம் வருகிறது என்றால் அவர்தான் ஜெயலலிதா...

  சிங்கம் போல் அவரது உருவப்படம் சட்டசபையில் அவர் இருந்தது போல் வீற்றிருக்கும்... ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறக்கும் அரசுக்கு வாழ்த்துக்கள், நன்றிகள் என்று டுவிட்டரில் ஜெ.தீபா தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  J.Deepa says that Opposition parties are afraid of one's photo means that is Jayalalitha. She doesnt do any scam, the persons who were with her do that scam.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற