For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷால பார்த்து கத்துக்கோங்க...ஜெ. தீபாவிற்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்!

தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்காக நடவடிக்கை எடுத்து வரும் விஷாலை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜெ. தீபாவிற்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ் செய்துள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு- போலி கையெழுத்துகள் கண்டுபிடிப்பு!!- வீடியோ

    சென்னை : வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்காக நடிகர் விஷால் தமிழக தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். விஷாலைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள் மேடம் என்று ஜெ. தீபாவிற்கு நெட்டிசன்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

    சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்தவர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் போது ஜெ. தீபா மற்றும் நடிகர் விஷாலின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. படிவம் 26ஐ சரியாக பூர்த்தி செய்யவில்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு காரணம் சொல்லப்பட்டது.

    படிவத்தில் சரியான தகவல்கள் இருந்ததாகவும், தன்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு அதிமுகவே காரணம் என்றும் காரணம் சொன்னார் தீபா. ஆனால் அதற்கு அடுத்தபடியாக அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நடிகர் விஷால் தன்னுடைய மனு நிராகரிக்கப்பட்டதற்காக தமிழக தேர்தல் அதிகாரியை சந்தித்து முறையிட்டுள்ளார்.

    விஷால் போராட்டம்

    விஷால் போராட்டம்

    அடுத்தபடியாக ஆளநரை சந்தித்தும் முறையிடப் போவதாக விஷால் கூறியுள்ளார். தான் தவறு செய்யவில்லை நியாயம் கிடைத்தே தீர வேண்டும் என்று சொல்லி வரும் விஷால் தொடர்ந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

    ஆணையம் முன் ஆஜராகிறார் தீபா

    இதனிடையே ஜெயலலிதா மரண விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெ. தீபாவிற்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தீபாவிற்கு அறிக்கை அளித்துள்ளது. டிசம்பர் 13ம் தேதி ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உள்ளதாக தீபா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    சந்தேகமா இருக்கே

    தீபாவின் இந்த டுவிட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்கள், மேடம் பாருங்க விஷால் எப்படி தன்னுடைய மனு நிராகரிக்கப்பட்டதுக்காக போராடுறாரு. இது தான் போராடும் குணம். நீங்கள் மவுனமாக இருப்பதை பார்த்தால் உங்கள் நம்பகத்தன்மையில் சந்தேகம் இருக்கிறதே என்று டுவீட்டியுள்ளார் இவர்.

    ஏன் தேர்தல் அதிகாரியை பார்க்கல

    இதே போன்று மற்றொரு வலைபதிவர், நடிகர் விஷாலப் பாருங்க தேர்தல் அதிகாரியை சந்தித்து நடந்ததை சொல்கிறார். தயவு செஞ்சு நீங்களும் அதை செய்யலாம்ல என்று ஆதங்கப்பட்டுள்ளார் இவர்.

    English summary
    Netizens trolling Jayalalihta Neice J. Deepa for not taking any action against her nomination rejected,t hey compare acctor vishal's spirit for fighting his rights.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X