ஜக்கி வாசுதேவின் நதிகள் மீட்பு பயணம்.. சுற்றுசூழலை மாசுபடுத்துகிறதாமே!?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நதிகளை மீட்க வலியுறுத்தி ஜக்கி வாசுதேவ் நாடு முழுவதும் தன்னுடைய விலையுயர்ந்த காரில் 7000கி.மீ பயணம் செய்கிறார். அவருடன் 20 கார்களில் அவரது ஆதரவாளர்கள் பயனம் செய்கின்றனர்.

வேகமாக வற்றி வரும் நதிகளை மீட்கவும், அவற்றின் அடிப்படை நீரோட்டத்தை அதிகரிக்கவும் 'நதிகளை மீட்போம்' என்ற இயக்கம், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவால் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கான விழா கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி, கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது. ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடந்த இந்த விழாவில் பஞ்சாப் ஆளுநர் வி.பி சிங், கிரிக்கெட் பிரபலங்கள் விரேந்திர சேவாக், மித்தாலி ராஜ், அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

 ஒரு மாத விழிப்புணர்பு பயணம்

ஒரு மாத விழிப்புணர்பு பயணம்

செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கிய பயணம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி டெல்லியில் நிறைவடைகிறது. நதிகளை மீட்கும் இப்பயணம் 15 மாநிலங்களின் வழியாகச் செல்கிறது. 20 இடங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதில் மாநில முதல்வர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 7000 கி.மீ... 8 லட்சம் மரங்கள்!

7000 கி.மீ... 8 லட்சம் மரங்கள்!

இந்நிலையில், ஜக்கி வாசுதேவ் அதிநவீன ஸ்போர்ட்ஸ் கார், மெர்சிடிஸ் பென்ஸில் 7000 கி.மீ பயணம் செய்யவுள்ளார். அவருடன் 20 மகேந்திரா ஜீப்புகள் செல்கின்றன. ஜக்கி வாசுதேவ் பயணம் செய்யும் எஸ்யூவி டைப் மெர்சிடிஸ் பென்ஸ் ஒரு லிட்டர் பெட்ரோல் 5 கி.மீ மைலேஜ் தான் கொடுக்கும். ஆகையால், நதிகளை மீட்கும் பயணத்தின் 21 கார்களால் ஏற்படும் மாசுபாட்டை ஈடுகட்ட 8 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என 'தி க்வின்ட்' என்ற பத்திரிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

'நதிகளை மீட்போம்'-திட்டத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த்-வீடியோ
8 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும்

8 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும்

ஜக்கி வாசுதேவ் பயணம் செய்யும் எஸ்யூவி டைப் மெர்சிடிஸ் பென்ஸ் ஒரு லிட்டர் பெட்ரோல் 5 கி.மீ மைலேதான் கொடுக்கும். ஆகையால், நதிகளை மீட்கும் பயணத்தின் 21 கார்களால் ஏற்படும் மாசுபாட்டை ஈடுகட்ட 87என 'தி க்வின்ட்' என்ற பத்திரிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 கேலிக்குள்ளாகும் மிஸ்டுகால்

கேலிக்குள்ளாகும் மிஸ்டுகால்

மேலும் நெட்டிசன்கள் காடுகளை அழித்தவர் நதிகளை மீட்க பயணமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் , நதிகளை மீட்க மிஸ்டுகால் கொடுங்கள் என்று கூறி பிரச்சாரம் செய்வதையும் கேலிக்குள்ளாக்கி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The quint magazine warned Jakki Vasudev's awareness travel for about 7000 k.m may cause pollution.
Please Wait while comments are loading...