For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளுக்கு விமரிசையாக திருமணம்.. சிஷ்யைகளுக்கு சன்னியாசம்.. ஜக்கி வாசுதேவ் சொல்வதை பாருங்க!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கோவையை சேர்ந்த காமராஜ் என்பவரின் இரு மகள்கள் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் சேர்ந்து, மொட்டையடித்து சன்னியாசியாக மாறிவிட்டதையும், ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ள போட்டோவையும் ஒன்றாக இணைத்து, சமூக வலைத்தளங்களி்ல் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருப்பது போல உண்மையிலேயே அது ஜக்கி வாசுதேவின் மகள்தானா, அப்படியானால் மகள் ஏன் சன்னியாசம் செல்லவில்லை என்பது போன்ற கேள்விகள் சமூக வலைத்தளவாசிகளிடம் உள்ளது.

இதுகுறித்து அறிய முற்பட்டபோது, அந்த போட்டோவிலுள்ள தகவல் உண்மைதான் என தெரியவந்தது. ஜக்கி வாசுதேவ் மகள் ராதேவுக்கும் சந்தீப் நாராயணன் என்பவருக்கும் கடந்த 2014 செப்டம்பர் 3 அன்று வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் நடந்தது. அப்போது எடுத்த புகைப்படம்தான் அது.

ஜக்கி கூறிய விளக்கம்

ஜக்கி கூறிய விளக்கம்

ஜக்கி வாசுதேவ் மகள் ராதே, நாட்டியத்தில் சிறந்து விளங்குபவராகும். ஆனால் சன்னியாசத்தில் அவருக்கு நாட்டமில்லை. குடும்ப வாழ்க்கையில் நாட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜக்கிவாசுதேவ் கூறியுள்ள விளக்கம்: யார் விரும்பி சன்னியாசம் கேட்கிறாரோ அவருக்கு தானே சன்னியாசம் கொடுக்க முடியும். பிரம்மச்சரியம்... சந்நியாசம்... ஆகிய இரண்டுக்குமே அடிப்படையான சாரம் எதுவென்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிரம்மச்சரியம்

பிரம்மச்சரியம்

பிரம்மச்சரியம் என்ற சொல்லின் பொருளே, புனிதத்தின் பாதையில் நடையிடுவது என்பதுதான். பிரபஞ்சத்தின் பெரும் சக்தியானது ஒவ்வொரு தனிமனிதனின் எல்லைக்குள்ளும் குறுகி நிற்கிறது. நாம் தனிமனிதர்களுக்கு எதிரானவர்களல்லர். ஆனால் தனிமனிதன் என்பது குறுகிய எல்லையின் அடையாளம். பிரபஞ்சம் என்பது எல்லையின்மை.

எல்லா நாட்டிலும் உள்ளது

எல்லா நாட்டிலும் உள்ளது

உலகின் எல்லாப் பகுதிகளிலுமே கலாச்சார ரீதியிலும், வளர்ச்சியிலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நாடுகளிடையே கூட, ஆன்மீகம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சந்நியாசமும் இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு கலாச்சாரமும் ஒன்றையொன்று பார்த்து கற்றுக் கொள்ளவில்லை. வாழ்வின் நிர்ப்பந்தங்களுக்குள் நிற்பவர்கள் கண்டுணராத ஒன்றை ஆன்மீகப் பாதையில் நடையிடுபவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

தேவை உள்ளவர்கள் வரலாம்

தேவை உள்ளவர்கள் வரலாம்

ஒரு காலத்தில் நம் தேசத்தில் மக்கள் தொகையில் 30% பேர் சந்நியாசிகளாக இருந்துள்ளார்கள், இது குறிப்பிடத்தக்க சதவிகிதம். குடும்ப வாழ்க்கைக்குள் போக வேண்டிய தேவை யாருக்கெல்லாம் உண்டோ அவர்களெல்லாம் அந்த பந்தத்தில் ஈடுபடலாம். உண்மையில் குடும்ப வாழ்வில் ஈடுபடுபவர்களில் பலருக்கும் அது சிறிது கால சுவாரசியம்தான். ஆனால் அந்த சிறிது கால சுவாரசியத்திற்காக வாழ்நாள் முழுவதும் சிக்கிக் கொள்கிறார்கள்.

குறுகிய உறவும் வேண்டாம்

குறுகிய உறவும் வேண்டாம்

இதைவிட மோசம் என்னவெனில் இதைக் கண்டறிந்து மேலைநாட்டிலும், மெதுமெதுவாக இந்தியாவிலும், இதற்குத் தீர்வு என்கிற பெயரில் குறுகிய கால உறவுகளைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்குகிறார்கள். இது மிக மோசமானது. ஏனெனில், உங்கள் உறவு குறுகிய காலமாக இருந்தாலும் சரி, வாழ்நாள் முழுமைக்குமாக இருந்தாலும் சரி, மனித உடலுக்கென்று சில ஞாபகப் பதிவுகள் உள்ளன.

பல பிறவி தேவை

பல பிறவி தேவை

கர்மவினை குறித்துப் பேசுகிறபோது, பிரபஞ்சத்தின் முதல் பெரும் பேரோசை தொடங்கி உடலளவிலான அனைத்து நெருக்கங்களும் உங்கள் கர்மவினையின் நினைவுப் பதிவில் உள்ளன. இதற்கு யோக மரபில் ‘ருனனு பந்தம்‘ என்று பெயர். சக்திநிலையின் ஸ்தூல பரிமாணத்தில் உருவாகிற பந்தங்களை இச்சொல் குறிக்கிறது. இந்த பந்தத்தைக் கரைக்க பலர் பல பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. முழுமையாக மூடி வைத்தால்தான் சக்தியை ஒருங்கிணைக்கலாம்!

சக்தி நிலை மாற்றம்

சக்தி நிலை மாற்றம்

ஈஷாவில் ஒருவர் பிரம்மச்சர்யத்திற்கோ, சந்நியாசத்திற்கோ வந்தால் நாம் அவர்களின் உடைகளை மட்டும் மாற்றுவதில்லை. அவர்களின் சக்தி நிலைகளையே மாற்றி விடுகிறோம். ஈஷாவில் பிரம்மச்சர்ய தீட்சை பெறுபவர்களை நீங்கள் அருகிலிருந்து கவனித்தால் தீட்சை பெற்ற 24 மணி நேரங்களுக்குள் அவர்களிடம் அசாத்தியமான மாற்றங்கள் நிகழ்வதைக் கண்டுணர்வீர்கள்.

ஆன்மீக முதலீடு

ஆன்மீக முதலீடு

24 மணி நேரங்களுக்குள் அவர்களின் சக்தி நிலையையே முழுமையாக மாற்றியமைப்பதன் மூலம் அவர்களிடம் மிகப் பிரம்மாண்டமான முதலீடு ஒன்றைச் செய்கிறேன். கௌதமபுத்தர் மேற்கொண்ட அணுகுமுறையை நான் மேற்கொண்டால் நம்மிடம் இந்நேரம் பல்லாயிரக்கணக்கான சந்நியாசிகள் இருப்பார்கள்.

வேண்டாம் என்றே சொல்வோம்

வேண்டாம் என்றே சொல்வோம்

நாம் பிரம்மச்சர்யம் கேட்டு வருபவர்களிடம் அதற்கெதிரான பாஷையிலேயே பேசுகிறோம் (வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்). அதை கேட்டபிறகு, அவர்களில் மிகச் சிலரே இந்தப் பாதைக்கு வருகிறார்கள். மாற்றுப் பாதை யாருக்கெல்லாம் இல்லையோ அவர்களைக் கண்டறிந்து அவர்களை மட்டுமே இப்பாதையில் ஈடுபடுத்துகிறோம்.

சமூகத்திற்கு நல்லது

சமூகத்திற்கு நல்லது

இத்தகைய முதலீடு ஏன் செய்யப்படுகிறதென்றால் அவர்களை தங்கள் உயிர் விடுதலைக்கு மாத்திரம் நாம் தயார் படுத்துவதில்லை. மாறாக, சமூகத்தில் உள்ள பலருக்கும் பல வாய்ப்புகளை உருவாக்கக் கூடியவர்களாக அவர்களை நாம் காண்கிறோம். எனவே சிலருடன் தங்கள் உறவைப் பகிர்ந்து கொள்பவர்களுக்கும், சந்நியாசிகளுக்கும் இருக்கிற வித்தியாசம் இதுதான்.

ஒருங்கிணைப்பு

ஒருங்கிணைப்பு

உங்கள் உடலின் செயல்பாடே ஒருவகையான சக்தி தொழில்நுட்பம். இதை பல முனைகளிலும் திறந்த நிலையில் வைத்து உலகில் பலவிதமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு மிருக்கலாம். முழுமையாக மூடிவைத்த நிலையில் உங்களுக்குள்ளேயே சக்தியை ஒருங்கிணைத்தும் வாழலாம்.

ஏவுகணை போன்றது

ஏவுகணை போன்றது

ஏவுகணைகளை இயக்கும் போது எல்லாப் பக்கங்களையும் நன்றாக அடைத்து வைத்து, ஒருபக்கம் மட்டும் நெருப்பு வைத்து விண்ணில் ஏவுவார்கள். எல்லாப்பக் கங்களிலும் நெருப்பு வைத்தால் அது எங்கேயும் போகாமல் வெடித்துச் சிதறும். ஒரு பிரம்மச்சாரியையும், சந்நியாசியையும் தயார் செய்வதும் ஓர் ஏவுகணையை உருவாக்குவது போலத்தான். எல்லாத் திசைகளையும் அடைத்து வைத்து ஒரு திசையில் மட்டும் நெருப்பு வைப்பதால் விண்ணில் உந்திச் செல்லும் விண்கலம் போல் அவருடைய சக்திகள் ஒருமுகப்படுத் தப்படுகின்றன.

அணுகுண்டுகள்

அணுகுண்டுகள்

ஒருமுகப்படுத்தப்படும் போதுதான் சக்திமிக்க கருவிகள் உருவாகின்றன. இவர்களும் அப்படி ஆக்கபூர்வமான ஆன்மீக அணுகுண்டுகளாக உருவாகிறார்கள். உங்கள் எல்லைக்கு அப்பாற்பட்டவற்றைத் தெரிந்து கொள்ள விண்கலங்களை ஏவுவதுபோல் உங்கள் எல்லைக்கு அப்பாற்பட்டவற்றையும் உங்களுக்கு சாத்தியமாக்கவே இவர்கள் உருவாக்கப் படுகிறார்கள். வாய்ப்புகள் நடைமுறைக்கு வருவது ஒரே இரவில் கூட நடக்கலாம்.

புத்தர் வழி

புத்தர் வழி

கௌதம புத்தரிடம் ஆன்மீகப் பாதையில் தனியாய் நடப்பது நல்லதா, துணையுடன் நடப்பது நல்லதா என்று கேட்டபோது தனியாய் நடப்பதே நல்லதென்றார். இல்லற வாழ்க்கை யாருக்குத் தேவையோ அவர்கள் அதிலே ஈடுபடலாம். அவரவர் பாதை அவரவருக்கு! இவ்வாறு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

English summary
Jaggi Vasudev exolains what is Sanyasam and who can practice it, at when Isha Yoga center comes under attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X