ஜெயாடிவியில் ஜெயானந்துக்கு முக்கிய பொறுப்பு... விரைவில் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சியிலும், ஜெயாடிவியிலும் ஜெயானந்த்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 நாட்கள் பரோலில் வந்துள்ள சசிகலா முக்கிய பஞ்சாயத்துக்களை பேசி முடித்துள்ளார். இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியுள்ள சசிகலாவை உடன் இருந்து கவனித்துக் கொள்கிறார் ஜெயானந்த். இளவரசி மகன் விவேக் ஜெயராமனும் சசிகலா உடனேயே இருக்கிறார்.

தினகரன் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுவாதால் கட்சி தங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறாராம் சசிகலா.

சசிகலா குடும்ப பஞ்சாயத்து

சசிகலா குடும்ப பஞ்சாயத்து

எந்தெந்த சொத்துக்களை யார் யார் நிர்வாகம் செய்வது என்பது பற்றியும் இந்த 5 நாட்களில் பேசி முடிவு செய்திருக்கிறார்களாம். குடும்ப பஞ்சாயத்து ஒருபக்கம் நடந்தாலும் யார் யார் எந்தெந்த பொறுப்பில் இருக்க வேண்டும் என்றும் பேசி முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஜெயானந்துக்கு பதவி

ஜெயானந்துக்கு பதவி

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி வரும் ஜெயானந்துக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறாராம் சசிகலா. ஜெயா டிவியிலும் ஜெயானந்த்துக்கு முக்கியமான பொறுப்பைக் கொடுத்து, எல்லாவற்றையும் கண்காணிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் சசிகலா.

ஜெயாடிவியில் விவேக் ஜெயராமன்

ஜெயாடிவியில் விவேக் ஜெயராமன்

தற்போது ஜெயாடிவியின் தலைமை செயல் தலைவராக இளவரசியின் மகள் விவேக் ஜெயராமன் இருக்கிறார். இப்போது ஜெயானந்த்துக்கும் ஜெயாடிவியில் பொறுப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறாராம் சசிகலா.

டிடிவி தினகரன் குடும்ப ஆதிக்கம்

டிடிவி தினகரன் குடும்ப ஆதிக்கம்

ஜெயாடிவியில் தினகரன் மனைவி அனுராதா, அவரது தங்கை பிரபா சிவகுமார் என தினகரன் குடும்பத்தினர் ஆதிக்கமே இருந்தது. கடந்த சில மாதங்களாக விவேக் ஜெயராமன் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இனி திவாகரன் மகன் ஜெயானந்த் முக்கிய பொறுப்பில் அமர வைக்கப்பட இருக்கிறார்.

சசிகலாவில் விரைவில் அறிவிப்பார்

சசிகலாவில் விரைவில் அறிவிப்பார்

ஜெயாடிவியிலும், கட்சியிலும் இனி ஜெயானந்துக்கு முக்கியத்துவம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பிய பிறகு இதற்கான அறிவிப்பு வரும் என்று சொல்கிறார்கள். ஜெயாடிவியில் குடும்ப பஞ்சாயத்தை பார்க்கவே இனி வேடிக்கையாக இருக்கும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sasikala decides Jayanandh is the key post in Party and Jaya TV announces are comming soon.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற