அசராத ஜெயா டிவி நிர்வாகம்.. ஐடி ரெய்டை செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களுக்கு காபி கொடுத்து உபசாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சின்னம்மா"வைப் பார்த்து விட்டுத் திரும்பிய தினகரனை வரவேற்ற ஐடி!- வீடியோ

  சென்னை: ஐடி ரெய்டு விஷயம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களுக்கு ஜெயா டிவி நிறுவன வாசலில் காபி, டீ கொடுத்து உபசரித்துள்ளார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக்.

  அரசியல்வாதிகள் வீடுகளில் ஐடி ரெய்டு நடக்கும்போது அதை செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்கள், புகைப்பட பத்திரிகையாளர்கள், ஏவல் ஆட்களை வைத்து துரத்தியடிக்கப்படுவது வாடிக்கை.

  Jaya TV office distribute tea and coffee for journalist

  ஆனால், சசிகலா மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதில் வித்தியாசமானவர்கள். ஜெயா டிவி அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டு குறித்து செய்தி சேகரிக்க சென்ற பிற ஊடக நிருபர்கள், புகைப்படக்காரர்களுக்கு டீ, காபி, குடிநீர் வழங்குமாறு விவேக் உத்தரவிட்டுள்ளார். ஆபீஸ் பாய் சென்று ஒவ்வொருவருக்கும், என்ன வேண்டும் என்று கேட்டு உபசரித்தார்.

  ஐடி ரெய்டு நடந்தபோதே, இவ்வாறு ரெய்டு நடக்கிறது என்பதை ஜெயா டிவி ஒளிபரப்பிக்கொண்டே இருந்தது. இதன்மூலம், ஐடி ரெய்டு குறித்து தாங்கள் அரசரப்போவதில்லை என்று சொல்லாமல் சொல்கிறது சசிகலா தரப்பு.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Jaya TV office distribute tea and coffee for journalist who were gathered there to make news.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற