ஜெயா டிவி‘ விவேக் குடும்பத்தினர் மீது கடத்தல் வழக்குகளை போடுகிறது டெல்லி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா குடும்பத்தினர் எவரும் இனி தலையெடுக்கக் கூடாது என்பதால் பழைய வழக்குகளையும் தூசு தட்ட தொடங்கிவிட்டதாம் டெல்லி.

மக்கள் மத்தியில் ஜெயா டி.வி என்றாலே அம்மா டி.வி என்ற பிம்பம் பதிவாகிவிட்டது. அப்படியிருக்கும்போது, மாவட்டங்களில் உள்ள தினகரன் ஆதரவு கட்சி நிர்வாகிகளை பொதுமக்களாக மாற்றி, அவதூறாகப் பேச வைத்துக் கொண்டிக்கின்றனர்.

தொலைக்காட்சியைக் கவனிக்கும் மக்கள் மத்தியில் ஆட்சியைப் பற்றிய தவறான பிம்பம் பதிவாகிறது. இதனால் வரக் கூடிய தேர்தல்களில் கூட்டணி அமைத்தாலும் பாதிப்பு ஏற்படும் என மத்திய உளவுத்துறை அறிக்கை அனுப்பியது.

 ரெய்டின் பின்னணி

ரெய்டின் பின்னணி

ஜெயா டி.வியில் அமைச்சர்களுக்கு எதிராகப் பிரசாரம் தீவிரம் எடுக்கக் காரணமே விவேக் ஜெயராமன்தான். இதை உணர்ந்துதான், இன்று இந்த உக்கிர ரெய்டாம்.

 கட்ட பாஸ்கர் வீடு

கட்ட பாஸ்கர் வீடு

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீட்டையும் அண்ணா நகரில் உள்ள அவருடைய மாமனார் 'கட்ட' பாஸ்கர் வீட்டையும் அதிர வைத்துக் கொண்டிருக்கின்றனர். சசிகலா குடும்பத்தில் நெட்வொர்க்குகளில் மிக முக்கியமானவர் பாஸ்கர்.

 ரெய்டில் சிக்கிய பரணி

ரெய்டில் சிக்கிய பரணி

மாமனாரை குறிவைப்பதை அதிர்ச்சியோடு கவனித்து வருகிறார் விவேக். மாமனார் மீது ஏகப்பட்ட வழக்குகளை போட ரெடியாகிறதாம் டெல்லி. அதேபோல், திவாகரனின் வலதுகரமாக இருந்து பணப் போக்குவரத்துகளைக் கையாண்டு வந்த பரணியும் ரெய்டில் சிக்கியிருக்கிறார்.

 ஜெயா டிவிக்கு குறி?

ஜெயா டிவிக்கு குறி?

டாக்டர் வெங்கடேஷின் நெருங்கிய நண்பர்கள், டாக்டர் சிவக்குமார் ஆகியோரும் தப்பவில்லை. இளவரசி மகன், மகள், சம்பந்தி என ஒருவரையும் அதிகாரிகள் விட்டு வைக்கவில்லை வருமான வரித்துறை அதிகாரிகள். ஜெயா டி.வி அலுவலகத்தில் இன்று நுழைந்த அதிகாரிகள் ஆசிரியர் குழுவிடம் கேள்விகளைக் கேட்டுள்ளனர். ' தினகரன் பேசும் செய்திகள் வந்தால், டி.வியை நடத்த விட மாட்டோம்' என்றெல்லாம் கூறியதாக ஊழியர்கள் தெரிவித்தனர். ரெய்டு செய்தியை சேகரிக்க வந்த செய்தியாளர்களுக்கும் தண்ணீர், தேநீர் என உபசரித்து அனுப்பியுள்ளனர். இந்த ரெய்டை சசிகலா குடும்பத்தினர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜெயா டி.வியை வளைக்கும் முயற்சியில் ஆளும்கட்சியில் உள்ளவர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதை நேரடியாக எதிர்கொள்ளும் முடிவில் இருக்கிறார் விவேக் என்கின்றனர் ஜெயா டி.வி ஊழியர்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
According to the Sources Jaya TV MD Vivek's family will face many cases including Smuggling.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற