For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வும் நாங்களும்.. புதிய புயலை கிளப்ப வருகிறது சசி கணவர் நடராசனின் சுயசரிதை!

என்னால் அவர் பதவி போய்விடுமோ என்கிற பயத்தினால்தான் என்னை அவர் எதிர்த்தார். அவருக்கு எதிர்த்துப் பேசுகிறவர்களைக் கண்டால் பிடிக்காது என ஜெயலலிதா குறித்து கூறினார் சசிகலா கணவர் ம. நடராசன்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவுக்கு என் விஷயத்தில் எப்போதும் 'சென்ஸ் ஆப் இன் செயூரிட்டி' இருக்கும். பதவியை பறித்துவிடுவேனோ என்ற அச்சத்தினால் தான் அவர் என்னை எப்போதும் எதிர்த்தார் என சசிகலா கணவர் நடராஜன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் மு. குணசேகரனுக்கு நடராசன் அளித்த பேட்டி:

கேள்வி: நீங்கள் ஜெயலலிதாவை எப்போது சந்தித்தீர்கள்? ஏன் உங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது?

பதில்: நான் அப்போதைய தென்னாற்காடு மாவட்டம் கடலூரில் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர்-செய்திப் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த போது கலக்டர் சந்திர லேகா எங்களுக்கு ஜெயலலிதாவை அறிமுகம் செய்துவைத்தார். என் மனைவிக்கும் அறிமுகம் செய்து வைத்தார். பிறகு மாவட்ட அதிமுக கூட்டதை பண்ருட்டி ராமச்சந்திரன் அங்கு நடத்தியபோது சந்தித்தேன். பிறகு 1981ஆம் ஆண்டு பாரதியார் நூற்றாண்டு விழா எட்டையபுரத்தில் நடந்தபோது அதில் அலுவலராக நான் இருந்தேன். அப்போது அங்கு நடந்த பெண்கள் கருத்தரங்கில் கலந்துகொல்ள வந்த ஜெயலலிதா கோவில்பட்டியில் தங்கியிருந்தார். அவரை துரை அவர்களும் நானும் கருத்தரங்குக்கு அழைத்துச் சென்றோம். அப்போது ஏற்பட்ட பழக்கம் தான்.

 சுயசரிதை

சுயசரிதை


கேள்வி: சுயசரிதை எழுதிக்கொண்டிருக்கிறார்களாமே

பதில்: ஆமாம். அதில் சொல்லாத நிறைய விஷயங்களை எழுதிக்கொண்டிருக்கிறேன்

கேள்வி: அதில் எல்லாம் உண்மையாக இருக்குமா?

பதில்: என்னிடத்தில் பொய் என்பதே இல்லை. பொய் சொல்லாத காரணத்தால் தான் நாங்களெல்லாம் வெகுஜன விரோதிகளாகிவிட்டோம். எப்படி பிளவு ஏற்பட்டது என்று கேட்டீர்கள் அல்லவா? 1981-ல் எங்களுக்கு அவர் அறிமுகமானார். 1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்தார். ஆனால் அந்த செய்தியை அவரிடம் யாரும் சொல்லவில்லை. ஒரு மக்கள் செய்தி தொடர்பாளராக நான் ராஜாஜி ஹாலை திரக்கும் வேலைகளைச் செய்ய வேண்டும். ஆனால் அவருக்கு தகவலும் சொல்லியாக வேண்டும். நான் சைக்கிள் ரிஷ்ஷாவில் சென்று விட்டேன். என் மனைவியையும் தினகரனையும் ஜெயலலிதா வீட்டுக்கு அனுப்பி அவரிடம் தகவலை சொல்லவைத்தேன். அவர்கள் அவரை ராஜாஜி ஹாலுக்கு அழைத்து வந்தார்கள்.

ஜெயலலிதாவை எம்ஜிஆரின் பூத உடலுக்கு அருகில் நிற்க வைக்க வேண்டும். அந்த வேலையை செய்தேன். ஆனால் அமைச்சர்களையும் சமாளிக்க வேண்டி இருந்தது. அன்று இருதலைகொள்ளி நிலை எனக்கு.

பிறகு எம்ஜிஆரின் உடல் ராணுவ வண்டியில் வைக்கப்பட்டபோது இறுதியாக மலர் வளையம் வைக்கச் சென்ற ஜெயலலிதாவை கே.பி.ராமலிங்கமும் திலீபனும் சேலையையும் முடிஒயையும் பிடித்து இழுத்து கீழே தள்ளினார்கள். அப்படி கீழே விழுந்தவரைக் கைப் பிடித்து தாங்கியவர் தான் என் மனவி சசிகலா.

 ஜெ.வின் கோபம் ஏன்?

ஜெ.வின் கோபம் ஏன்?

கேள்வி: உங்கள் மனைவி சசிகலாவும் அவரும் உயிர்த்தோழிகள் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் உங்களை பலமுறை எதிர்த்து அறிக்கை விட்டு உள்ளார். அப்போது குற்றச்சாட்டுக்களைக் கூறியுள்ளாரே?

பதில்: அவர் என் மீது எந்தக் குற்றச்சாட்டுக்களையும் கூறியது கிடையாது. கட்சியினர் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என கூறினார். அது அனைவருக்கும் சொல்லக் கூடிய ஒரு விஷயம் தானே.

கேள்வி: நீங்கள் தான் அதிமுகவை கட்டிக்காப்பாற்றிக் கொண்டிருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறீர்கள் என உங்களை ஜெயலலிதா சொன்னாரே

பதில்: அது, மருங்காபுரி இடைத் தேர்தலில் அதிமுக 13,000 வாக்குகல் பெற்று வெற்றி பெற்ற போது அவருக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றியிருக்கலாம். ஆரம்பத்தில் அவருக்கு இனரீதியாக, ஜாதி ரீதியாக ஒரு தொகுதியை கணிக்கத் தெரியாது. பின்னாளில் அதை அவர் கரைத்துக் குடித்தார் என்பது வேறு விஷயம். ஆனால் அப்போது அதில் அவருக்கு வழிகாட்டியதால் அப்படி தோன்றியிருக்கலாம்.

மருங்காபுரி இடை தேர்தலில் அதிமுக ஜெயிக்க இவன்தான் காரணம் என கருணாநிதி என்னை சிறையில் அடைத்தார். இந்த சம்பவத்துக்கு முன்பு ஜெயலலிதா நான் அரசியலில் இருந்து விலகிக்கொள்கிறேன். எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்கிறேன் என சபாநாயகருக்கும் மீடியாவுக்கும் கடிதம் எழுதினார். நான் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு போய் என் வீட்டில் வைத்துக்கொண்டேன். அதைக் கேட்டு என் வீடுவரை வந்தார். நான் எதைஎதையோ சொல்லி சமாளித்து அவரை அனுப்பினேன்.

அதனாலும் கருணாநிதி என் மேல் கோபம் அடைந்தார். ராஜினாமா செய்து போகிறேன் என்று சொல்கிறவரை இவர் ஏன் தடுக்கிறார் என்ற கோபத்திலும் என்னை கைது செய்து இருக்கலாம். ஆனால் அந்தக் கடிதம் குறித்து மத்திய அரசு அந்தக் கடிதத்தில் ராஜினாமா குறித்துதான் எழுதியுள்ளது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என கேட்ட பிறகுதான் என் மீது இருந்த வழக்கு பெரிதாகவில்லை.

 சுயமரியாதைதான் காரணம்

சுயமரியாதைதான் காரணம்

கருத்து வேறுபாடு வரக் காரணம்... நான் அவர் வீட்டில் இருந்தபோது கட்சியில் சிலரிடம் நீங்கள் பேசக் கூடாது எறு சொன்னார். என்னால் அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. நான் சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்தவன். என்னால் அப்படி யாருக்கும் கட்டுப்பட்டு இருக்க முடியாது என்பதால் அந்த வீட்டை விட்டு வெளியேறி வந்தேன். என் மனைவி ஏன் போகிறீர்கள் என கேட்டார். நான் அதை உன் அக்காவிடமே கேள் என கூறிவிட்டு வந்துவிட்டேன். திரும்ப என் வீட்டுக்கு வந்து ஜெயலலிதா அழைத்தார். நான் உறுதியாக இருந்துவிட்டு, வர மாட்டேன் என கூறிவிட்டேன்.

கேள்வி: ஜெயலிதாவை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?

பதில்: ஜெயலலிதா பதவி ஏற்றபோது 1991ல் அவர் சீப் செகரட்டரியை அனுப்பி அழைப்பிதழ் வழங்கி வரச் சொன்னார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டபோதுதான் அவரை பார்த்தேன். நான் இறுதியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி என்றால் அதான்.

 போட்டு கொடுத்தனர்

போட்டு கொடுத்தனர்

கேள்வி: இல்லை... நீங்கள் ஜெயலலிதாவை கூட்டங்களில் அல்லாமல் இறுதியாகப் பார்த்தது எப்போது?

பதில்: அவர் பதவியேற்ற பிறகு வீட்டுக்கு வரச்சொல்லி என் குடும்பத்து ஆட்களை அனுப்பினார் நான் மறுத்துவிட்டேன். அவருக்கு எப்போதும் சென்ஸ் ஆப் இன்செக்யூரிட்டி உண்டு. எங்கே இவர் நம் பதவியை பறித்துவிடுவாரோ என அச்சப்பட்டுக்கொண்டே இருப்பார். அதனால் தான் உளவுத்துறை அதிகாரிகள் சொல்வதையெல்லாம் நம்பினார்.

சசிகலாவின் அக்கா இறந்தபோது அங்கு நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை ஆட்சியைக் கைப்பற்றபோகிறோம் என அப்போதைய டிஜிபி ராமனுஜம் கொடுத்த தகவலை அப்படியே நம்பி சசிகலாவை வீட்டை விட்டு வெளியேற்றினார். பின்பு அழைத்துக்கொண்டார்.

ஆனால் அதிலிருந்து உருவான டேமேஜஸ் கடைசி வரை சரிபடுத்த முடியாமலேயே போய்விட்டது. நல்லது செய்து உபத்திரத்தில் மாட்டிக்கொள்வதற்கு உதாரணம் நானும் என் மனைவி சசிகலாவும் தான். அவரால் நான் பெற்ற எதிர்ப்புகளும் சவால்கலுமதிகம் அதை வரலாற்ரில் எழுதுவேன்.

ஜெயலலிதாவுக்கு எதிர்த்துப் பேசினால் பிடிக்காது. கையைக் கட்டிக்கொண்டு ஆமாம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அவரைப் பொறுத்தவரை அவர்கள் உத்தமர்கள். என்னால் அப்படி இருக்க முடியாது. ஆகையால் எதிர்ப்புகளைச் சந்தித்தேன்.

 பொறுமை இதனால்தான்...

பொறுமை இதனால்தான்...

கேள்வி: ஜெயலலிதாவால் எதிர்ப்புகளை சந்தித்த போதும் நீங்கள் அவரை ஒருபோதும் எதிர்த்துப் பேசியதில்லையே... ஏன்?

பதில்: நல்ல கேள்வி. அதாவது ஒருவரை தேர்ந்தெடுக்கும்போது யோசித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தெடுத்தபின்பு அவரை சந்தேகப்படக் கூடாது என்பதுதான் தமிழர் பண்பாடு. நான் திராவிட இயக்கச் சிந்தனையில் வளர்ந்தவன் என்பதால் அந்த ஒழுக்கத்துக்குக் கட்ட்டுப்பட்டு வாழ்ந்தேன்.

ஜெயலலிதாவால் யாரையும் சந்தேகப்படாமல் இருக்க முடியாது. மறைந்த சோ சொல்லுவார்... எம்ஜிஆருக்கு அடுத்தவர் மேல் 5 சதவீதம் சந்தேகம் என்றால் ஜெயலலிதாவுக்கு 100 சதவீதம் சந்தேகம்.அதை சசிகலாவால் மட்டும்தான் எதிர்கொள்ள முடியும் என்பார். அந்த சந்தேகத்தினால் தான் தேவையில்லாமல் பலர் மீதும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஏன் பொறுமையாக இருந்தீர்கள் என கேட்கிறீர்கள். நான் தெரியாமல் தமிழைப் படித்துவிட்டேன். பொறை என்பது போற்றாரைப் பொறுத்தல். அப்படித்தான் பொறுத்துக்கொண்டேன்.

 நாங்க ராக்கெட் மாதிரி

நாங்க ராக்கெட் மாதிரி

கேள்வி: உங்கள் மனைவி சசிகலாவைம் பிரிந்து வாழந்தது உங்களுக்கு இழப்பு இல்லையா?

பதில்: என் அம்மாவும் சசிகலா அம்மாவும் சமாதானம் பேசி சசிகலாவை அழைத்து வர முயற்சித்தார்கள். உங்களுக்கு நினைவு இருக்கிறதா என தெரியவில்லை. அந்த சமயத்தில் ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார்.

ஜெயலலிதா சந்தோஷமாக இருப்பது போல் நானே ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளேன். போயஸ் கார்டன் வந்துவிட்டு, ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் செல்லும் அமைச்சர்கள், கட்சி பிரமுகர்களிடம் வெளியே போகும்போது புரட்சித் தலைவி நன்றாகப் பேசினார் என பேசிக்கொண்டு செல்லுங்கள் என்று சொல்வேன். இதனால் கருணாநிதியே ஏமாந்து உள்ளார்.

அதாவது ஒரு ஆராய்ச்சிக்காக அனுப்படுகிற செயற்கைகோளில் ஒவ்வொரு ராக்கெட்டாக எரிந்து விழும். ஒவ்வ்வொரு எல்லையை அது அடையும் போது ஒரு ராக்கெட் கீழே விழும். அதுபோலத்தான் எங்கள் குடும்பத்தினர் ஜெயலலிதாவுக்கு இருந்தோம். எதிர்காலத்தில் சசிகலா இதையெல்லாம் எழுதலாம்.. தன் அக்காவை விட்டுக் கொடுக்காமல் எழுதுவார்.

 ரூ3 கோடி பேரம்

ரூ3 கோடி பேரம்

கேள்வி: உங்கள் பேச்சில் ஒரு வலி தெரிகிறதே

பதில்: வலியெல்லாம் இல்லை. என்னை பலர் கேட்டுள்ளார்கள்.அதிமுகவைக் காப்பாற்ற வேண்டும் என்று இவரை ஏன் தேர்ந்தெடுகிறீர்கள் என்று. எனக்கு ஜானகி அம்மாவின் மீது வருத்தம் கிடையாது. ஆனால் திடகாத்திரமாக இருந்த எம்ஜிஆரே திடேரென உடல்நலன் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். வயதான ஜானகி அம்மாவால் எத்தனை நாளைக்குக் கட்சியைக் காப்பாற்ற முடியும்?

எனக்கும் என் மனைவிக்கும் மூன்று கோடி பணம் தருகிறோம். இதிலிருந்து ஒதுங்கி விடுங்கள் என்று பேரம் பேசினார்கள் சிலர். ஆனால் நாங்கள் வாங்கவில்லையே.

எம்ஜிஆர் மறைந்த்போது மேடம் ஜெ.வுக்கு நாற்பது வயதுதான். அவர் தலைவராக வந்தால் கட்சியை குறைந்தபட்சம் ஒரு 25 வருடங்களாவது எடுத்துச் செல்வார் என்பதால்தான் அவரோடு நின்றோம். 25 ஆண்டுக்கு என்று சொன்னோம். அவர் 30 ஆண்டுகள் ஆட்சியையும் கட்சியையும் கொண்டு செலுத்தினார். ஆட்சியில் இருக்கும்போதே மறைஇந்தார் என்பது வரலாறு.

இவ்வாறு நடராசன் கூறினார்.

English summary
Jayalalitha had insecurity feeling and she suspected everyone around her told M. Natarasan, Sasikala's husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X