For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் முதல்வராகிறார் ஜெ... பூட்டிய "சேம்பர்" திறக்கப்படுகிறது.. விலகத் தயாராகும் ஓ.பி.எஸ்

Google Oneindia Tamil News

சென்னை: மீண்டும் ஜெயலலிதா முதல்வராகவுள்ளதால், அவர் இதுவரை அமர்ந்திருந்து, அவர் போனதற்குப் பிறகு பூட்டி வைக்கப்பட்டிருந்த முதல்வர் அறை மீண்டும் திறக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவுக்காக தயாராக்கப்படவுள்ளது.

மேலும் முதல்வர் பதவியில் ஜெயலலிதா அமருவதற்கு வசதியாக தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

Jayalalitha's chamber gets ready to receive her

கிட்டத்தட்ட ஒரு மிகப் பெரிய கண்டத்திலிருந்து தப்பியுள்ளார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட அவரது அரசியல் வாழ்வே அஸ்தமித்துப் போய் விடும் என்ற அளவுக்கு மிகக் கடுமையாக மிரட்டிய சவால் இந்த வழக்கு. இதிலிருந்து அவர் மீண்டுள்ளார்.

இதையடுத்து மீண்டும் முதல்வர் பதவியில் அவர் அமரவுள்ளார். இதனால் அதிமுகவினர் அடியோடு சந்தோஷமாக காணப்படுகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், உற்சாகமாக ஜெயலலிதா தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடி வருகின்றனர்.

முதல்வர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலகியதும் அவரது அலுவலக அறை மூடப்பட்டு விட்டது. புதிய முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் அந்த அறையில் அமராமல் தனது அறையிலேயே அமர்ந்து பணியாற்றி வந்தார். அந்த அறைப் பக்கம் கூட அவர் போகவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஜெயலலிதா முதல்வராகவுள்ளதால் ஜெயலலிதா அமர்ந்திருந்த அறை திறக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படவுள்ளதாம். இதற்கான உத்தரவை பன்னீர் செல்வம் பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் முதல்வர் பதவிக்கு ஜெயலலிதா வருவதற்கு வசதியாக ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை இன்றே ராஜினாமா செய்வார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

English summary
Jayalalitha's chamber in the secretariat is getting ready to receive her after her success in the DA case appeal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X