டிடிவியை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருந்தார் ஜெயலலிதா: வெளுத்து வாங்கிய எடப்பாடியார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிடிவி-யை வெளுத்து வாங்கிய எடப்பாடியார் | Oneindia Tamil

  சென்னை: டிடிவி தினகரனை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருந்தார் ஜெயலலிதா என எடப்பாடி பழனிச்சாமி சாடியுள்ளார்.

  அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்த நாள் விழா சென்னை தங்கசாலை பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரனை சரமாரியாக சாடினார்.

  ஜெயலலிதாவின் ஆட்சியை கலைக்க சிலர் முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். டிடிவி தினகரன் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு செயல்படுகிறார் என்றும் அவர் சாடினார்.

  மானம் உள்ள அதிமுக தொண்டன்

  மானம் உள்ள அதிமுக தொண்டன்

  மானம் உள்ள எந்த அதிமுக தொண்டனும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். 10 ஆண்டுகளாக டிடிவி தினகரன் எங்கு இருந்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

  எங்கு வைக்க வேண்டுமோ..

  எங்கு வைக்க வேண்டுமோ..

  டிடிவி தினகரனை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருந்தார் ஜெயலலிதா என்றும் அவர் கூறினார். ஒரே நாளில் பதவியேற்று அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி விடலாம் என நினைக்கிறார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

  யாராலும் அசைக்க முடியாது

  யாராலும் அசைக்க முடியாது

  கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தங்களுடன் வந்திணைவார்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்தார். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

  யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி

  யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி

  திமுக அரசியல் ஆதாயத்துக்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால் மக்கள் நலனுக்காகவும் மாநில நலனுக்காகவும் மட்டும் தான் அதிமுக கூட்டணி வைக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Edappadi Palanisami slams TTV Dinakaran. Jayalalitha was keeping TTV Dinakaran where he should be, Edappadi palanisami said. where TTV Dinakaran was last 10 years he asked.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற