For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி இந்த வாரம் அறிவிப்பு?

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இப்போது அதிமுக செயலாளராக இருக்கும் சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக ஜெயலலிதா இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது.

Jayalalithaa wealth case judgement in a week

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை விதித்து பெங்களூரு விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. பின்னர், மேல்முறையீட்டு வழக்கில் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அதன் தீர்ப்பை எதிர்த்து வழக்கு நடைபெற்ற மாநிலம் என்ற முறையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில் வழக்கின் முதல் குற்றவாளி என சேர்க்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இந்த வாரத்தில் வெளியாகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Sources say that Jayalalithaa wealth case final judgement may be released in a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X