For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் தள்ளுபடி: கி.வீரமணி வரவேற்பு

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதற்கு வீரமணி வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று ஆணை பிறப்பித்துள்ளது.

K Veeramani welcome to farmers loan waived in tamilnadu

இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இந்தத் தீர்ப்பின் மீது மேல் முறையீடுக்குச் செல்லாமல் தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற ஆணையை செயல்படுத்த வேண்டும்.

ரூ.7000 கோடி விவசாயக் கடன்களை கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோது, மாநில அரசே அந்த சுமையை ஏற்று தள்ளுபடி செய்தது என்பதை நினைவூட்டுகிறோம். கூட்டுறவுக் கடன்கள் மட்டுமின்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
Dravidar Kazhagam president K. Veeramani's statement about farmers loan waived in tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X