கிறிஸ்தவ மிஷினரிகள் நிதி உதவி செய்கிறதா? கமல்ஹாசன் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கிறிஸ்துவ மிஷனரிகள் கமலுக்கு உதவி செய்கிறதா ? கமலின் பதில்

  திருச்சி: கிறிஸ்துவ மிஷனரிகள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உதவுவதாக எழுந்த புகாருக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

  ஈரோட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்கள் கமல்ஹாசன் அவரது ரசிர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார்.

  Kamal Haasan clarifies whether Christian Missionaries helping him or not

  அதில் ''சினிமாவில் எனக்கு கிடைத்துள்ள புகழ், அரசியலுக்கு போதாது. எனக்கு மக்களின் அன்பு முக்கியம். மக்களுக்கு மாற்றம் தேவை. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்'' என்றுள்ளார்.

  மேலும் ''மக்கள் நலன் மட்டுமே எனக்கு முக்கியம். இது அரசியல் இல்லை. இதுதான் என்னுடைய கொள்கை. என் கட்சியின் கொள்கை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  மேலும் ''கிறிஸ்துவ அமைப்புகள் எனக்கு நிதி உதவி செய்வதாக கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை கேட்டு சிரிப்புதான் வருகிறது'' என்றுள்ளார்.

  மேலும் '' இந்த கேள்வியில் கொஞ்சம் கூட அர்த்தம் இல்லை. இதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இதற்கு சிரிப்புதான் வருகிறது'' என்றுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kamal Haasan clarifies whether Christian Missionaries helping him or not. He says that it is laughing question.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற