For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்சி சின்னத்துக்கு கமல் அளித்துள்ள அட்டகாச விளக்கம்!

By Shankar
Google Oneindia Tamil News

Recommended Video

    கமலின் கட்சி கொடியின் ரகசியம் இதுதான்!

    மதுரை: கமல் ஹாஸன் ஆரம்பித்துள்ள புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் சின்னத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் கமல் ஹாஸன்.

    "இந்தச் சின்னத்தை உற்றுப் பார்த்தால், அந்தக் கொடியில் இருக்கும் 6 கைகள், தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலத்தைக் குறிக்கும். நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும்," என்று கமல் தெரிவித்துள்ளார்.

    Kamal Haasan's explanation to party symbol

    தென்னிந்தியாவில் தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி மற்றும் கர்நாடகம் என ஆறு மாறுநிலங்கள் உள்ளன. மராட்டிய மாநிலமும் தன்னை வட மாநிலம் என சொல்லிக் கொள்வதில்லை. தென் மாநிலங்களுள் ஒன்றாகவே தன்னைக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது.

    இந்த ஆறு மாநிலங்கள்தான் இந்தியாவின் பெரும்பான்மை நிதி ஆதாரமாகத் திகழ்கின்றன. குறிப்பாக மராட்டியமும் தமிழகமும் இந்தியாவின் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட பாதி பங்களிப்பைத் தருகின்றன. எனவே தென் மாநிலங்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டால், மத்திய அரசிடம் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது நீண்ட காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்து. இதனை வலியுறுத்தி கமல் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamal Haasan has gave a new explanation for his party symbol.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X