கமலுக்கு மனநலம் பாதித்து விட்டதாம்.. தரம் தாழ்ந்து தாக்க ஆரம்பித்த பாஜக தலைவர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்து தீவிரவாதம் குறித்த கமல் கருத்து.. பாஜக, சிவசேனை கடும் எதிர்ப்பு!- வீடியோ

சென்னை: இந்து தீவிரவாதம் இல்லை என்று இந்துக்களே கூற முடியாது என நடிகர் கமல்ஹாசன், வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரைக்கு பாஜக தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார் கூறுகையில், கமல் மனநிலை சரியில்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியவர். அவமரியாதை செய்யும் வகையிலான இந்த அரசியல் சரியில்லை. கமலிடம் தனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் கிடையாது.

Kamal Haasan's mental state is unstable: Vinay Katiyar

கமல் மீது தமிழக பாஜக சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றார்.

பாஜக செய்தித்தொடர்பாளர் நரசிம்மா ராவ் கூறுகையில், இஸ்லாமியர்கள் வாக்குகளை பெற குறி வைத்து கமல் இவ்வாறு பேசுகிறார். ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே போன்றவர்கள், சோனியா, ராகுல் காந்தி அறிவுரையை ஏற்று, முன்பு இவ்வாறு பேசி வந்தனர். இப்போது கமல் அந்த கூட்டத்தில் சேர்ந்துள்ளார். இந்து மதத்தை இழிவுபடுத்தும் நோக்கம் இதில் உள்ளது என்றார்.

பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், நான் ஊழலுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தபோது, கமல் ஏசி அறையில் அமர்ந்திருந்தார். இடதுசாரிகள் கமலை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அரசியல் இனியும் எடுபடாது. தமிழகத்தைவிட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP leader Vinay Katiyar today said that Kamal Haasan's mental state is unstable. He should be getting treated in a hospital.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற