கமல்ஹாசன் ரெடி.. இம்மாத இறுதிக்குள் தனிக் கட்சி.. பரபரப்பு தகவல்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கமல்ஹாசன் ரெடி.. இம்மாத இறுதிக்குள் தனிக் கட்சி-வீடியோ

  சென்னை: இந்த மாத இறுதிக்குள் நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

  தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் நிலவுவதாக கமல்ஹாசன் நினைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுவதாகவும், எனவே தனிக்கட்சி தொடங்குவது குறித்து இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த தகவல்கள் இதுதான்:

  ஆயத்த பணிகளில் கமல்

  ஆயத்த பணிகளில் கமல்

  "அரசியல் கட்சியை தொடங்கும் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். விஜயதசமி நாளில் அதற்கான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. தனது முடிவு குறித்து இன்னும் நற்பணி மன்ற நிர்வாக தலைவர்களுக்கு கமல் எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சியை முழுமையாக பல்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்" என்று கமலுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

  ஏற்ற காலகட்டம்

  ஏற்ற காலகட்டம்

  கமலுக்கு நெருக்கமான மேலும் ஒருவர் கூறுகையில், "இப்போதுதான் கமல் அரசியலில் களமிறங்க ஏற்ற காலம். திமுகவோ ஆளும் கட்சியோ பெரிய கூட்டணியை அமைக்கும் முன்பாக அரசியல் கட்சியை ஆரம்பிப்பது எதிர்காலத்திற்கு நல்லது என்று கமல் நினைக்கிறார்" என்று கூறியுள்ளார் அவர்.

  நற்பணி மன்றத்தினருடன் ஆலோசனை

  நற்பணி மன்றத்தினருடன் ஆலோசனை

  மேலும் அவர் கூறுகையில், "தமிழகத்தில் தற்போது அரசியல் வெற்றிடம் இருப்பதாக கமல் கருதுகிறார். கமல் கூறும் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ந்துள்ளார். நற்பணி மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்திக்கொண்டுள்ளார். தான் மதிக்கும் அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்களிடம், அரசியல் கட்சி தொடங்கும் திட்டத்தை தெரிவித்து ஆலோசனைகளை பெற்று வருகிறார்" என்றார்.

  உள்ளாட்சி தேர்தலே இலக்கு

  உள்ளாட்சி தேர்தலே இலக்கு

  நவம்பரில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதில் போட்டியிடுவதற்கு ஏற்ப, இம்மாத இறுதிக்குள் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை கமல் வெளியிடக் கூடும் என்கிறார்கள். சுமார் 4000 வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் உள்ளாட்சி தேர்தலின் மூலம், அடிமட்ட அளவுக்கு கட்சியை கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்படும் என்பது கமல் கணக்கு.

  இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு

  இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு

  நற்பணி மன்றத்தில் கட்டுக்கோப்பான நிர்வாகிகள் உள்ளனர். எனவே உள்ளாட்சி தேர்தலில் இவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கமல் நம்புகிறாராம். செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கமல் பங்கேற்கிறார். மறுநாள் கோழிக்கோட்டில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செமினாரில் பங்கேற்கிறார். அதன்பிறகு அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kamal Haasan set to launch party in this month, says sources close to him, The Indian Express news paper claim.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற