10ம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்… கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது.

தமிழகத்தில் மார்ச் 8ந் தேதி முதல் 30ந் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு முடிவு வெளியிடுவதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி. மாணவர்களின் ரேங்க் பட்டியல் மற்றும் மாவட்ட வாரியான மதிப்பெண் பட்டியல்கள் வெளியிடப்படாமல், மாணவ மாணவியர்களுக்கு கிரேடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Kanyakumari top in government school performance

இந்த தேர்வு முடிவின்படி அரசுப் பள்ளிகள் 91.59 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தனியார் பள்ளிகள் 98.54 சதவீதம் பெற்றுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் செயல்பாடு கன்னியாகுமரியில் சிறப்பாக உள்ளது. தமிழக மாவட்டங்களில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவ மாணவிகளுக்கு செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The government schools in Kanyakumari district top in 10th result.
Please Wait while comments are loading...