Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசின் மழை, வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. ரூ.1 கோடி: கருணாநிதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் மழை, வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. சார்பில் ரூ1 கோடி வழங்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வடகிழக்குப் பருவமழை வெளுத்து வாங்கியுள்ளது. தலைநகர் சென்னை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

Karunanidhi announces Rs.1 crore to TN govt. flood releif fund

பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் நிவாரணப் பணிகளுக்கு தி.மு.க. ஆதரவளிக்கும் என்று நேற்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். மேலும் மழை வெள்ளத்தில் சிக்கி எங்காவது ஆபத்தில் இருப்பவர்கள் 044-24320280 அல்லது 7810878108 ஆகிய எண்களில் தி.மு.க.வை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசின் மழை வெள்ள நிவாரண நிதிக்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி அறிக்கை விவரம்:

மக்களுக்கு நிவாரண உதவிகளை போதிய அளவுக்கு வழங்குவதற்கு மாவட்டந்தோறும் அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து, அந்தக் குழுவினர் முன்னிலையில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டுமென்றும் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.

கடந்த பத்து நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து பெய்துவரும் பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அனைத்துப் பிரிவு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு, பலர் வீடிழந்து, வாழ்வாதாரம் உள்ளிட்ட உடைமைகளை இழந்து வருந்தி நிற்கின்ற நிலையில், அவர்களின் துயரில் பங்கேற்கின்ற விதமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் தமிழக அரசிடம் வழங்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழக அரசின் சார்பில் துயர் துடைப்பு நிதியாக அறிவிக்கப்பட்டிருக்கும் 500 கோடி ரூபாய் என்பது ஏற்பட்டிருக்கும் இழப்பின் அளவோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகவும் குறைவாகவே உள்ளதால், தமிழக அரசு மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து பெரும் அளவுக்கு நிதியினைப் பெறவும், தமிழகத்தில் உள்ள வசதி படைத்தோரிடமிருந்து நிவாரண நிதி திரட்டிடவும் உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை போதிய அளவுக்கு வழங்குவதற்கு மாவட்டந்தோறும் அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைத்து, அந்தக் குழுவினர் முன்னிலையில் நிவாரண உதவிகளை வழங்கிட வேண்டுமென்றும் திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+