For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி இறுதிச்சடங்கு: ராகுலுக்கு குறைவான பாதுகாப்பு.. மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்

திமுகவின் தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சரியாக பாதுகாப்பு வழங்காதது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளத

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் ராகுலுக்கு பாதுகாப்பு குறைபாடு குறித்து உயர்நீதிமன்றம் நோட்டிஸ்- வீடியோ

    சென்னை: திமுகவின் தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கில் பாதுகாப்பு குறைபாடு குறித்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சரியாக பாதுகாப்பு வழங்காதது குறித்தும் விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார். கருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    Karunanidhi Burial: Chennai HC asks explanation from central about security arrangements for Rahul

    இந்த நிலையில் கருணாநிதியின் இறுதிசடங்கின் போது நடந்த சம்பவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை தவிர மற்ற யாருக்கும் போலீஸ் இறுதி சடங்கின் போது, சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    முக்கியமாக, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த ராகுல் காந்திக்கு பாதுகாப்பு சரியாக வழங்கப்படவில்லை. கூட்டத்தில் இருந்தவர்கள் அவர் கையை தொடும், அளவிற்கு பாதுகாப்பு மோசமாக இருந்தது. இந்த நிலையில் இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து வக்கீல் சூரியபிரகாசம் சென்னை ஹைகோர்டில் வழக்கு தொடுத்தார். இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

    இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 4 வாரத்தில் விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    English summary
    Karunanidhi Burial: Chennai HC asks explanation from central about security arrangements for Rahul Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X