For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணின் வலியா? கழகத்தின் வலிவா? எதில் கவனம் செலுத்துவது? தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: கண்ணின் வலியா? கழகத்தின் வலிவா? எதில் கவனம் செலுத்துவது? என்ற நோக்கத்தோடு தான் பணியாற்றுவதால், கழகத் தொண்டர்களும் வெற்றிக்காக ஓயாது உழைக்க வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1953 ஆம் ஆண்டு திருப்பத்தூரில் ஏற்பட்ட விபத்தில் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பையும், "மணிமகுடம்" நாடகத்தின் கடைசி காட்சிகளை எழுதிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று என் இடது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி.

karunanidhi letter to party Volunteers

இது தொடர்பாக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதம்:

1967ஆம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஏற்பட்ட பயங்கரக் கார் விபத்தில் சிக்கியதால் கண் வலி அதிகமானது குறிப்பிட்டுள்ள கருணாநிதி, மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின் பேரில் வெளிநாடு சென்று கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதையும் நினைவு கூர்ந்துள்ளார்.

``வெளிநாடு சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த கண் வலி சற்று குறைந்த போதிலும், அவ்வப்போது அந்த வலி இன்னமும் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. ஏன், அந்த வலி இன்றளவும் என்னை வேதனைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்தக் கண்ணின் வலி அதிகமா? அல்லது அவ்வப்போது என்னோடு தொடர்ந்து அரசியல் பயணம் நடத்தியோர் தந்த மன வலி அதிகமா? என்ற கேள்விகளோடு என் கழகப் பணியும், பொதுப்பணியும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.'' என குறிப்பிட்டுள்ளார் திமுக தலைவர்.

``எனக்கு வலி, தொல்லை எவ்வளவு இருந்தாலும், நமது கழகத்திற்கும், தமிழகத்திலே வாழும் மக்களுக்கும் இன்னமும் பணியாற்ற வேண்டுமென்று என் உள்ளத்திலே எழுகின்ற உணர்ச்சியினால் தான் நான் தொடர்ந்து பணியாற்றி வருவதை தொண்டர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.''

இந்நிலையில், 2016 தேர்தலுக்கு பலர் விருப்ப மனுக்களை பெற்று சென்று, தலைமைக் கழகத்தில் திருப்பி அளித்து வருகின்றனர். மேலும், காலையிலும், மாலையிலும் சுமார் 50 பேருக்குக் குறையாமல் தேர்தல் நிதி வழங்கி வருகின்றனர். அதன்படி இதுவரை ரூ. 26,84,30,936 வசூலாகியுள்ளது. இது எனக்குள்ள கண் வலியை மறக்கவே செய்கிறது.

ஒரு தொகுதிக்கு பல பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்திருக்கலாம். ஆனால் ஒருவரைத்தான் நமது கழகத்தின் சார்பில் ஒரு தொகுதியிலே நிறுத்த முடியும். மேலும் சில தொகுதிகளை தோழமைக் கட்சிகளுக்கு வழங்க நேரிடலாம். அந்தத் தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தவர்கள் தலைமைக் கழகத்திலே கட்டிய தொகை மீண்டும் திரும்பத் தரப்பட்டு விடும் என்று தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் நன்றாக சிந்தித்துப் பார்த்து, கழகம் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பணியாற்ற வேண்டும்.

கண்ணின் வலியா? கழகத்தின் வலிவா? எதில் கவனம் செலுத்துவது? என்ற நோக்கத்தோடு நான் பணியாற்றுவதைப் புரிந்து கொண்டு, தொண்டர்களும் கழகத்தின் வெற்றிக்காக எப்போதும் போல் ஓயாது உழைக்க வேண்டும் என்று கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK leader karunanidhi wrote the letter to his party Volunteers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X