For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலைஞர் டிவிக்கு அழைப்பு.. மற்றவர்களுக்கு நாமம்... போக்குவரத்துத் துறை நடத்திய "ஹாஹா" முகாம்

Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கண்துடைப்புக்காக இதை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலை பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டும், பெருகிவரும் விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் தமிழகமெங்கும் பல லட்ச ரூபாய் செலவில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது.

Karur medical camp creates controversy

இதில் சாலையில் வாகனங்களை இயக்குவோர், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் என பலதரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் இன்று கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தனியார் மருத்துவமனையின் பயிற்சி செவிலியர்களும் ஒரிரு மருத்துவர்கள் மட்டும் பங்கேற்ற முகாமில் ஆட்டோ ஓட்டுனர்கள், பள்ளி வாகனங்களை ஓட்டுபவர்கள், தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதை நம்பி சிகிச்சைக்காக வந்த பலதரப்பு ஓட்டுனர்களுக்கு அங்கே பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரனங்கள் ஏதுமின்றி இருந்ததைக் கண்டு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அழைப்பட்டதால் சிகிச்சை முகாமிற்கு வராமல் சென்றால், எங்கே நாளை வாகனங்களை இயக்கும் போது ஏதேனும் காரணம் கூறி வழக்கு அல்லது அபராதம் விதிப்புக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தால் பல ஆட்டோ டிரைவர்கள் சிகிச்சை பெற வந்தனராம்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் கூறும்போது சாலைப் பாதுகாப்பிக்கு தேவையான அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் வெறும் கண்துடைப்பிற்காகவும் விளம்பரத்திற்காகவும் நடத்தப்படும் இது போன்ற செயல்களால் மக்களின் வரிப்பணம் வீனாகிறது. அதிகாரிகள் கடைமைக்காக இது போன்ற செயல்களை செய்யாமல் மக்களின் உயிர் பாதுகாப்பு விசயத்தில் தேவையான அக்கறை கொள்ள வேண்டும் இதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்றார்.

Karur medical camp creates controversy

அதை விட காமெடியாக பத்திரிகையாளர்களுக்கு சரிவர அழைப்பு விடுக்கவில்லை. மாறாக கலைஞர் டிவியை கூப்பிட்டிருந்தார்களாம். மேலும் இந்த செய்தி குறித்து பெரிதாக போட வேண்டாம் என்றும் அதிகாரிகளே கேட்டுக் கொண்டனராம்.

ரொம்ப வித்தியாசமான டீலிங்கா இருக்கே.. கரூர் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதி என்பது கொசுருத் தகவல்!

English summary
Karur medical camp, organised by RTO dept has created controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X