For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கருணாநிதியுடன் சந்திப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார்.

லோக்சபா தேர்தலில் திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தன.

தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் முடிந்தது. அதன் பின்னர் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான விடுதலைச் சிறுத்தைகள் தொல் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகியோர் திமுக தலைவரைச் சந்தித்துப் பேசியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் கருணாநிதியைச் சந்தித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இதில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அணுகுமுறைகள் குறித்து ஆலோசனை நடந்திருக்கலாம் எனத் தெரிகின்றது.

English summary
Puthiya Tamilagam party’s leader Dr Krishnasami met DMK president Karunanidhi in his Gobalapuram house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X