நாலாபுறமும் சிதறி ஓடினோம்: காட்டுக்குள் செல்ல ரூ200 கொடுத்தோம்: குரங்கணி தீவிபத்தில் தப்பிய டிரைவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாலாபுறமும் சிதறி ஓடினோம்...உள்ளே செல்ல 200 கொடுத்தோம்...வீடியோ

  தேனி: குரங்கணி காட்டு பகுதிக்குள் செல்ல ரூ. 200 கொடுத்து அனுமதி பெற்றோம் என்றும் தீவிபத்து ஏற்பட்டவுடன் நாலாபுறமும் சிதறி ஓடினோம் என்றும் டிரைவர் பிரபு பேட்டி அளித்துள்ளார்.

  குரங்கணி மலை பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்காக 36 பேர் கொண்ட குழுவினர் சென்றிருந்தனர். இவர்கள் சென்னை மற்றும் ஈரோடு மாவட்டம் ஆகிய குழுக்களில் சென்றனர். அங்கு மலையேற்ற பயிற்சிகளை முடித்துக் கொண்டு அவர்கள் ஞாயிற்றுக்கிழமை திரும்பினர்.

  அப்போது வழியில் காட்டுத் தீயில் சிக்கினர். இந்த பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்தது.

  16 பேர் மருத்துவமனையில் அனுமதி

  16 பேர் மருத்துவமனையில் அனுமதி

  மொத்தம் 36 பேரில் 10 பேருக்கு எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பினர். மீதமுள்ள 16 பேர் தேனி, மதுரை உள்ளிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  பிரபு வாக்குமூலம்

  பிரபு வாக்குமூலம்

  இந்த பயணத்துக்கு திருப்பூரில் இருந்து அழைத்து சென்ற டிரைவர் பிரபு தீவிபத்தில் இருந்து உயிர் தப்பினார். டூர் டி இந்தியா ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தை சேர்ந்தவர் பிரபு. இவர் காவல் துறையில் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், டூர் டி இந்தியா ஹாலிடேஸ் என்ற பெயரில் ஈரோட்டில் சுற்றுலா அழைத்து செல்லும் அலுவலகத்தை நடத்தி வருகிறேன்.

  குரங்கணிக்கு...

  குரங்கணிக்கு...

  கடந்த மார்ச் 10-ஆம் தேதி நான் உள்பட 12 நபர்களுடன் சென்னிமலையிலிருந்து ஒரு டிராவல்ஸ் மூலம் தேனி வந்தோம். எங்களுடன் குரங்கணி மலைபகுதியை நன்கு அறிந்த ரஞ்சித் என்பவர் வழிகாட்டியாக வந்தார். சோதனை சாவடியில் ரூ 200 செலுத்தி அனுமதி சீட்டு பெற்றோம்.

  தீ பரவியது

  தீ பரவியது

  பின்னர் ஞாயிற்றுக்கிழமை மதியம் மலையிலிருந்து கீழே இறங்கினோம். அப்போது சுமார் 1 மணியளவில் காட்டுத் தீ பரவியதை அறிந்த ரஞ்சித் வேகமாக மலையை விட்டு இறங்க வேண்டும் என்றார். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியது. நாங்கள் லாலாபுறமும் சிதறி ஓடினோம். அதன்பின்னர் ஒரு பள்ளத்தில் குதித்தோம். எங்களை கிராம மக்கள் மீட்டனர். தீ அணைந்த பிறகு, நாங்கள் எங்கிருந்து பிரிந்தோமே அந்த இடத்துக்கு கிராம மக்களுடன் சென்றோம். ஆனால் அங்கு 9 பேர் கருகியிருந்ததை கண்டு வேதனை அடைந்தோம் என்றார் அவர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Driver and Program Organiser Prabhu from Tiruppur explains the incident happen in Kurangani forest.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற