For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த மாசு காசு எங்கப்பா.. தினகரன் தரப்பை நெருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அணியிலேயே இருப்பதற்காக பேசப்பட்ட பணம் இன்னும் கைக்கு வந்து சேராததால் தினகரன் தரப்பை எம்.எல்.ஏக்கள் நெருக்கி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நெருக்குதல் அதிகம் இருப்பதால் தினகரன் தரப்பு டென்ஷனாக காணப்படுகிறதாம்.

அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை என மத்தியிலிருந்து கண்காணிப்பும், கிடுக்கிப்பிடியும் அதிகமாக இருப்பதால் முன்பு போல பணத்தை சுதந்திரமாக புழங்க முடியாத நிலையில் உள்ளனராம்.

கொஞ்சம் பொறுத்திருங்கள், கையில் காசு இல்லை, சேகரித்து வருகிறோம். வந்ததும் கொடுத்து விடுகிறோம் என்று கூறி எம்.எல்.ஏக்களை ஆசுவாசப்படுத்த முயன்று வருகிறார்களாம்.

கூவத்தூர் புத்துணர்ச்சி முகாம்

கூவத்தூர் புத்துணர்ச்சி முகாம்

அதிமுக பிளவுபட்டு சட்டசபையில் எடப்பாடியார் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட்டதைத் தொடர்ந்து கூவத்தூரில் கொண்டு போய் தனது தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்களை அடைத்தார் சசிகலா. அங்கு எம்.எம்.ஏக்களை விதம் விதமாக குளிப்பாட்டினார்கள்.

விதம் விதமான வாக்குறுதிகள்

விதம் விதமான வாக்குறுதிகள்

அந்த முகாமில் அடைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்களுக்கு பல்வேறு வகையான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதில் ஒன்றாக கூறப்படுவது 3 மாதத்திற்கு ஒருமுறை ரூ. 25 லட்சம் பணம் தரப்படும் என்பதாம். இதில்தான் தற்போது சிக்கலாகியுள்ளதாம்.

முதல் தவணை வரலையே!

முதல் தவணை வரலையே!

தற்போது முதல் தவணை பணத்தைத் தர வேண்டுமாம். ஆனால் இதுவரை ஒரு சிங்கிள் நயா பைசாவைக் கூட கண்ணில் காட்டலையாம். இதனால் ஆதரவு எம்.எல்.ஏக்கள் டென்ஷனாகியுள்ளனராம். என்னாச்சு என்று கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனராம்.

என்னய்யா ஆச்சு??

என்னய்யா ஆச்சு??

காசு என்னாச்சு, சொன்னபடி தர மாட்டீங்களா, அப்ப நாங்க அணி மாறிடவா என்று கேட்டு தினகரன் தரப்பை நெருக்க ஆரம்பித்துள்ளனராம். இதனால் தினகரன் தரப்பு நெளிய ஆரம்பித்துள்ளதாம்.

பாக்கி வராததால்

பாக்கி வராததால்

உண்மையில் தினகரன் தரப்புக்கு பல்வேறு வகையான நெருக்கடிகள் உள்ளனவாம். வருமானவரித்துறை தீவிரமாக கண்காணித்துக் கொண்டுள்ளது. மறுபக்கம் அமலாக்கப் பிரிவும் காத்திருக்கிறது. இது போக பல்வேறு தொழில்கள் மூலமாக வரவேண்டிய பணமும் இன்னும் கைக்கு வரவில்லையாம். இதனால்தான் சொன்னபடி முதல் தவணையைப் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்

பொறுத்துக்குங்க

பொறுத்துக்குங்க

விரைவில் பணம் கிடைத்து வரும், பொறுமையா இருங்க என்று ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் தினகரன் தரப்பு கூறி அமைதிப்படுத்தி வருகிறதாம். மறுபக்கம் தேவையான பணத்தையும் திரட்ட ஆரம்பித்துள்ளனராம். விரைவில் காந்தியை கண்ணில் காட்டி விடுவார்களாம்.

English summary
"Kuvathur" ADMK MLAs are started demanding the promised gifts by the Dinakaran camp during their stay in the resorts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X