For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் நாளன்று லீவு விடாவிட்டால் கடும் நடவடிக்கை.. லக்கானி மீண்டும் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் நாளன்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீண்டும் எச்சரித்துள்ளார்.

Lakhani warns Private firms and IT on poll day holiday

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து தனியார் நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். நிறுவன பணியாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

இதுவரை தமிழகத்தில் 38,000 வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 3,200 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்கள் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் லக்கானி.

English summary
TN CEO Rajesh Lakhani has once again warned the Private firms and IT industry on poll day holiday on May 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X