சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலால் பரபரப்பு.. 4 மாணவர்கள் காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: சட்டக் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலில், 4 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கோரிமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் சட்டக் கல்லூரியில் படிக்கும் சண்முகம் என்ற மாணவருக்கும் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மணிகண்டன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய மாணவர்கள் இடையே இன்று மாலை திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

Law collage students clash in Salem

இதையடுத்து, மாணவர் சண்முகம் தனது நண்பர்களுடன் சென்று மணிகண்டன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய இருவரையும் கத்தி மற்றும் கட்டைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் மணிகண்டன் மற்றும் விக்னேஷ்வரன் உட்பட 4 பேர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் நடுவே மோதல் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
4 students got injured while law collage students involved clash in Salem.
Please Wait while comments are loading...