For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொறியியல் கல்வி மதிப்பை முன்கூட்டியே கணித்தவர் ஜேப்பியார்.. பேராசிரியர் திறந்த மடல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: கல்வித் தந்தை என்று போற்றப்படும் சத்தியபாமா கல்வி குழும தலைவர் ஜேப்பியார் மறைந்துள்ள நிலையில், அவரின் செயல்பாடுகளை அருகாமையில் இருந்து பார்க்கும் வாய்ப்பை பெற்ற சத்தியபாபா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் 'ஒன்இந்தியா தமிழ்' தளத்திற்கு அதுகுறித்து விரிவாக எழுதியுள்ள மடல் இது:

தனது 85 வயதில் மரணம் அடைந்த சத்தியபாமா பல்கலைக்கழக நிறுவனர் ஜேப்பியார், ஒரு மிகச் சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர். ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக தனது வாழ்க்கையைத் தொடங்கி தனது கடின உழைப்பால் அவரது அரசியல் ஆசான் எம்ஜிஆரின் நம்பிக்கையை பெற்றவர்.

ஜேப்பியார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வி துறையையும் மற்றும் பழைய மஹாபலிபுரம் ரோடு மார்க்கெட் மதிப்பையும் மிக்க சரியாக கணித்து செயல்பட்டார்.

Lecturer experience with renowned educationalist Jeppiaar

எம்ஜிஆரின் துணைவியார் ஜானகி அம்மையாரால் எம்ஜிஆரின் தாயார் பெயரில் சத்யபாமா பொறியியல் கல்லூரியை தொடங்கினார். அதன் பிறகு சென்னையின் புகழ் மிக்க பல கல்லுரிகளை நிறுவினார். ஒரு கல்லூரியை எப்படி தான் நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கற்று கொடுத்தார்.

புகழ் மிக்க பல கல்வி குழுமம்களின் வழி காட்டியாய் விளக்கினார். சத்யபாமா பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழமாக உயர்த்தி காட்டினார்

பல கல்வி குழுமம்களின் வாரிசுகள் ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் அல்லது பயிற்று கொண்டு இருப்பார்கள். இதன் மூலம் தலைமை பணப்பை கற்று தரும் ஆசானாய் விளக்கினார் ஜேப்பியார், சத்யபாமா பொறியியல் கல்லூரியை பழைய மஹாபலிபுரம் ரோட்டில் தொடங்கிய பிறகு தான் பல தகவல் தொழில் நிறுவனங்கள் கால் பதிக்க தொடங்கின.

கடைகோடி குமரியில் பிறந்து தனது பயணத்தை கல்வி நிறுவனகளுடன் நிறுத்தி கொள்ளாமல் ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் ஸ்டீல், ஜேப்பியார் வாட்டர், ஜேப்பியார் சால்ட், என பல தொழில்களில் தடம் பதித்தவர். தனது சொந்த ஊரில் தனது முதல் தனியார் துறைமுகம் ஒன்றை நிறுவினார்.

ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆண் பாலினத்தவரை விட பெண் பாலினத்தவர் அதிகம். தங்களது பெண் பிள்ளைகளை இங்கு நம்பி படிக்கவைக்கலாம் என்ற தகப்பன்களின் நம்பிக்கை பெற்றவர்.

தனது ஊழியர்களுக்கு சிறப்பான ஊதியம், உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல் என கொடுத்தல் என ஊழியர்களின் உள்ளத்தில் இடம் பெற்றவர் ஜேப்பியார்.

ஜேப்பியார் bus mess concept இன்று பல கல்வி நிறுவனங்கள் காப்பி அடித்து வருகின்றன. இதற்காக எப்போதும் விளம்பரம் தேடாதவர் ஜேப்பியார் என்னும் கல்வியாளர்.

பொருளுக்காக கல்வி தேடும் உலகில் பொருள் ஈட்டிய பின்பு கல்வியை தேடியவர். தனது 60 வயதில் அண்ணா பல்கலைக்கத்தில் நீர் மேலாண்மை தொடர்பான ஆயவுகளுக்காக முனைவர் பட்டம் பெற்றவர். ஒரு மனிதனின் தொடக்கம் பார்க்க படுவது இல்லை அவன் முடிவு மட்டும் பார்க்க படுகிறது என்பதை குறிக்கோளாக கொண்டு பலரை வாழ வைத்து சரித்திரம் பெற்று இருக்கிறார் எம் வேந்தர்.

கட்டுரையாளர்:

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர்
இயந்திரவியல் துறை ,
சத்தியபாமா பல்கலைக்கழகம் ,
சென்னை.

English summary
A lecturer's experience with renowned educationalist Jeppiaar who passes away recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X