For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் இருந்து லாரி லாரியாக கோழிக் கழிவுகள்.. மடக்கி பிடித்த பொதுமக்கள்.. நெல்லையில் பரபரப்பு

கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகள் வந்த லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: பணகுடி அருகே கேரளாவில் இருந்து வந்த கோழி கழிவு லாரிகளை பொது மக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்டைத்தனர்.

கேரளாவில் சேகரமாகும் கோழிக் கழிவுகளை பணகுடி காவல் கிணறு நான்கு வழிச்சாலையில் இரவு நேரத்தில் வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் தூர் நாற்றம் வீசிக் கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது.

Lorry trying to dump Chicken wastage in TN seized

இந்நிலையில், கேரளாவில் இருந்து கோழி கழிவு, ரசாயன கழிவு, காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று, நான்கு வழி சாலையில் நிறுத்தப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் கழிவுகளை கொட்டுவதற்காக தார்பாயை லாரி டிரைவர் இறக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்தவர்கள் இதனைப் பார்த்து பதற்றம அடைந்தனர். உடனடியாக அதனை தடுக்கவே டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பின்னர், இரண்டு மணி நேரம் கழித்து மாற்று டிரைவர் வந்து லாரியை எடுக்க முயன்றார். அப்போது காவல் கிணறை சேர்ந்த இளைஞர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து பணகுடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில், முதலில் வந்த டிரைவர் ஆனந்த் என்பதும் அவர் திருவனந்தபுரத்திலிருந்து இந்த கழிவுகளை ஏற்றி வந்துள்ளதாகவும், இவைகளை வள்ளியூர் அருகே கொட்ட முயன்ற போது, அங்கிருந்த மக்கள் லாரியை சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்ததும் தெரிய வந்தது.

மேலும், வள்ளியூரில் வழக்கு பதியாமல் லாரியை திருவனந்தபுரத்திற்கு எடுத்து செல்ல போலீசார் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்திற்கு செல்வதற்கு பதில் டிரைவர் ஆனந்த், பணகுடி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு லாரியை நிறுத்தி கழிவுகளை இறக்க முற்படும் போது பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

English summary
Lorry, which trying to dump chicken wastage from Kerala, was seized by public in Tirunelveli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X