ஜெ. படத்தை சட்டசபையில் அகற்ற கோரும் திமுக வழக்கு- உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திரு உருவப்படம் திறப்பு- வீடியோ

  சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் இருந்து அகற்ற கோரி திமுக தாக்கல் செய்துள்ள வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

  ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் நேற்று சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

  Madras HC to hear DMK plea against Jayalalithaa's portrait

  உச்சநீதிமன்றத்தால் சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. அத்துடன் சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது.

  திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The Madras High court will hear the DMK plea against the Jayalalithaa's portrait in Tamil Nadu Assembly on today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற