For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆணவ கொலையை தடுக்க எஸ்சி, எஸ்டியினருக்கு ஆயுதம் தர கோரும் வழக்கில் மத்திய அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஆணவக் கொலைகளைத் தடுக்க தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு தற்காப்பு வழங்கக் கோரும் வழக்கில் மத்திய அரசும் பதிலளிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய மக்கள் மன்றத் தலைவரான வாராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஆணவக் கொலைகளைத் தடுக்கக் கோரி ஒருமனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைல் வாராகி கூறியிருந்ததாவது:

தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் இந்த 2 கட்சிகளும் இதுவரை ஆணவக் கொலைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2003-ல் கலப்புத் திருமணம் செய்த விருத்தாச்சலம் தம்பதி முருகேசன்- கண்ணகி முதல், திருச்செங்கோடு கோகுல்ராஜ், மன்னார்குடி அமிர்தவள்ளி-பழனியப்பன், சமீபத்தில் உடுமலைப்பேட்டை சங்கர் என தொடர்ச்சியாக ஆணவக் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

81 பேர் ஆணவக் கொலை

81 பேர் ஆணவக் கொலை

கடந்த 3 ஆண்டுகளில் கலப்புத் திருமணம் செய்த 81 பேர் இறந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆணவக் கொலைகள் நடந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கலாம் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

தனிச்சட்டமும் ஆயுதமும்...

தனிச்சட்டமும் ஆயுதமும்...

எனவே, தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உத்தரவிட வேண்டும். அதுபோல வன்கொடுமை அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தற்காப்பு ஆயுதம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

இந்த மனுவை அண்மையில் விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் இதுகுறித்து தமிழக அரசு, எதிர்கட்சியான திமுக மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் இன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். இன்றைய விசாரணையின் போது இவ்வழக்கில் மத்திய அரசும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

மத்திய அரசுக்கு ஏன்?

மத்திய அரசுக்கு ஏன்?

இன்றைய விசாரணையின் போது திபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருவதில் மத்திய அரசுக்கும் பங்கு வேண்டும். இந்த வழக்கில் மத்திய அரசை எதிர் மனுதாரராக சேர்ப்பதாகவும், 6 மாதத்திற்குள் இந்த மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

English summary
Madras high court on Wednesday issued notice to Centre on a public interest litigation seeking a new legislation to prevent honour killings in the TN and a direction to the authorities to provide arms to SCs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X