கத்திக்குத்து பட்ட பேராசிரியர் ஜெனிபாவால் பேச முடியவில்லை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளரால் கத்தியால் குத்தப்பட்ட துறைத்தலைவர் ஜெனிபா பேச முடியாமல் உள்ளதால் வாக்குமூலம் வாங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

கடந்த மாதம் 26ஆம் தேதி, காமராசர் பல்கலை கழகத்தில் மொழியியல் மற்றும் தொடர்பியல் துறையின் தலைவராக பணியாற்றி வரும் ஜெனிபாவை, அவரின் கீழ், பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றிய ஜோதிமுருகன் என்பவர் கத்தியால் 32 இடங்களில் குத்தினார்.

Madurai Kamarajar university professor Jenifa unable to talk

அப்போது ஜெனிபாவின் அலறல் சத்தம் கேட்டு, அவரது அறைக்கு ஓடி வந்த மாணவர்கள் ஜெனிபாவை ஜோதிமுருகனிடமிருந்து மீட்டனர். மேலும், கத்தியால் குத்திய ஜோதிமுருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தொண்டையில் கத்தியால் குத்தியதால் தற்போது மருத்துவமனையில் இருக்கும் ஜெனிபாவால் வாக்குமூலம் கொடுக்க முடியவில்லை. இதனால் இந்த வழக்கின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Madurai Kamajar University, Professor Jenifa attacked by his junior and she is unable to talk and it affects case progress.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற