ஒரே நேரத்தில் இரண்டு கள்ளக்காதலன் சந்திப்பால் கொடூரம்.. பட்டதாரி ஆசிரியர் வெட்டிக் கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: ஜோலார்பேட்டை அருகே பட்டதாரி ஆசிரியர் கள்ளக்காதல் தகராறில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் அடுத்த மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்(48), பட்டதாரி ஆசிரியர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். லட்சுமணன் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். பின்னர், ஆசிரியர் பணியில் இருந்து நின்றுவிட்டு, ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதிகளில் சேவை வரிகளை வசூலித்து, அதை வருமான வரித்துறை அலுவலகத்தில் கட்டும் பணியை செய்து வந்தார்.

man murder for illegal affairs, one person arrested

இதனிடையே தீபக் என்பவரின் மனைவி வனிதா என்பவருடன் லட்சுமணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை தீபக் பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தாயலூர் அடுத்த புத்தூர் சாலையோரம் லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

முன்னதாக வனிதாவிற்கும் லட்சுமணனுடன் ஏற்கனவே கள்ளக்காதல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.

இதனால் காதல் வலையில் விழுந்த வனிதா, அண்ணாமலையிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசியுள்ளார். இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வனிதா மீது அண்ணாமலைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வனிதாவிற்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்துள்ளார் அண்ணாமலை.

அப்போது வனிதா லெட்சுமணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்து கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து லெட்சுமணனுக்கும் அண்ணாமலைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து வனிதா தப்பியோடிவிட்டதால் தனிமையில் மாட்டிக்கொண்ட லட்சுமணனை அண்ணாமலை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஏலகிரிமலை போலீசார் அண்ணாமலையை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In an extra marital affair a man, lakshmanan killed in vellore district
Please Wait while comments are loading...