For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணல் கடத்தலை தடுக்க முயன்ற ஆர்ஐயை கொல்ல முயற்சி - 4 பேர் கைது

Google Oneindia Tamil News

ராஜபாளையம்: மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை கொல்ல முயன்ற 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்த டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டவுனில் வருவாய் ஆய்வாளராக இருப்பவர் ரவி. இவர் கிராம் நிர்வாக அதிகாரி கணேசன், உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோருடன் மணல் திருட்டு தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை தடுத்தி நிறுத்த முயன்றார்.

ஆனால் டிராக்டரை நிறுத்தாத டிரைவர் வருவாய் ஆய்வாளரை ஆபாசமாக திட்டியதோடு இல்லாமல் அவரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரும், மற்ற இரண்டு பேரும் சுதாரித்து டிராக்டரில் இருந்து விலகி ஓடி உயிர் பிழைத்தனர்.

அதோடு இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அங்கு டிராக்டரை ஓட்டி கொண்டிருந்த டிரைவர் ராஜாராமை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

மேலும் அதில் இருந்த டவுனை சேர்ந்த பொண்னுக்காளை, ரஞ்சித் ஆகியோரையும் கைது செய்தனர். மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் அரசு அதிகாரிகள் மத்தியில் கீலியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Viruthunagar district RI tried to kill by a man who was theft sand in Viruthunagar. Police filed case and arrested that man.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X