For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகே கண்மணி படத்தை இணையதளத்தில் வெளியிட கூகுள் உள்பட 13 நிறுவனங்களுக்கு தடை: ஹைகோர்ட்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் கடந்த 17ம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதை எதிர்த்து மணிரத்னம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Mani Ratnam not ok with film piracy

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

எங்கள் நிறுவனம் "ஓ காதல் கண்மணி' என்ற திரைப்படத்தை தயாரித்து கடந்த 17-ஆம் தேதி வெளியிட்டது. எங்களது படத்தை அடையாளம் தெரியாத நபர்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இணையயதளத்தில் எங்களது படத்தை சிலர் வெளியிட்டதால் அதிலிருந்து பதிவிறக்கம் செய்து படத்தைப் பார்க்கின்றனர். இதனால், எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இணையதள சேவை வழங்கும் கூகுள், பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் உள்பட 13 தனியார் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதன் மூலம் எங்களது படத்தை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்ய முடியாது. எனவே, "ஓ காதல் கண்மணி' படத்தை இணையதளத்தில் வெளியிட இந்த 13 நிறுவனங்கள் உள்பட அசோக்குமார் என்பவருக்கும் தடை விதிக்க வேண்டும். அவரது யூ.ஆர்.எல். முகவரியை முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மணிரத்னம் தாக்கல் செய்த மனு நீதிபதி கே. ரவிச்சந்திரபாபு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் ஓ காதல் கண்மணி படத்தை இணையதளத்தில் வெளியிட அசோக் குமார் மற்றும் 13 தனியார் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்ததுடன் வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைத்தார்.

English summary
Chennai high court has banned 13 private companies and one Mr. Ashok Kumar from releasing OK Kanmani in the net.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X