மன்மோகன் சிங்கை விமர்சித்த ஆ. ராசா... கருத்து சொல்ல மறுத்த திருநாவுக்கரசர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மன்மோகன் சிங்கை திட்டும் ஆ.ராசா- வீடியோ

  சென்னை: 2 ஜி வழக்கில் என்னை கைது செய்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று மன்மோகன்சிங் நினைத்தார். ஆனால் எதுவுமே சரியாகவில்லை என்று ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கருத்து கூற விரும்பவில்லை என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

  2007ஆம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்ற பிறகு, 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில், 2008ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கினார். அதில், பெருமளவு முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

  1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டதாக மத்திய கணக்காயம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்து வழக்கு விசாரணையைத் தொடங்கியது.

  ஆ.ராசா, கனிமொழி விடுதலை

  ஆ.ராசா, கனிமொழி விடுதலை

  7 ஆண்டுகள் நடைபெற்ற 2ஜி வழக்கில் கடந்த 21ம் தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் சிக்கி இருந்த 19 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஆ.ராசா, கனிமொழி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

  14 பேரும் விடுதலை

  14 பேரும் விடுதலை

  இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 21 தேதி வெளிவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி .சைனி குற்றம்சாட்டபட்ட 14 பேரையும் குற்றத்திற்கான ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்து உத்தரவிட்டார். இது திமுக, காங்கிரஸ் கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  மன்மோகன் தவறு

  மன்மோகன் தவறு

  இந்நிலையில் கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆர். ராசா பேசுகையில்,இந்த 2ஜி வழக்கை எதோ பெரிய ஊழல் என்று சித்தரித்தார்கள். இதை பற்றி பேசி, பேசி இரண்டு முறை எங்களை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்தார்கள். மன்மோகன் சிங் நல்ல ஆட்சி நடத்தினார். ஆனால் இதனால் அவரும் பாதிக்கப்பட்டு ஆட்சியை இழந்தார் என்று குறிப்பிட்டார்.

  வழக்கின் விளைவு

  வழக்கின் விளைவு

  மன்மோகன் சிங்கிற்கும் இந்த வழக்கு குறித்து புரியவில்லை. என்னை கைது செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தார். ஆனால் எதுவுமே சரியாகவில்லை. அதனுடைய விளைவை அவரே கடைசியில் அனுபவித்தார்'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ''பார்வையற்றவர்கள் யானையை தடவி அதன் உருவத்தை விவரித்தது போல் மத்திய புலனாய்வு அமைப்பும் , உச்சநீதிமன்றமும் 2ஜி வழக்கை கையாண்டு இருக்கிறது'' என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

  திருநாவுக்கரசர்

  திருநாவுக்கரசர்

  திடீரென இவ்வாறு ராசா பேசுவதற்கு காரணம் என்ன? கூட்டணி மாறும் முடிவில் திமுக உள்ளதா? அதற்கான அச்சாரமா ராசாவின் பேச்சு என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் களங்கம் துடைத்தெறியப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். ராசாவின் கருத்து குறித்து தற்போது எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Former telecom minister A Raja said the then Prime Minister Manmohan Singh made a mistake by thinking that all would become well if he (Raja) was arrested. "He misunderstood the 2G issue. he was addressing people of Nilgiris Lok Sabha constituency, from where he contested in Parliamentary elections. Congress leader Tirunavukarasar no comments for Raja's Statement.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற