வாழ்த்த வருபவர்களுக்கு ஆளுக்கொரு டெபிட் கார்டு! பாலக்காட்டில் பலே திருமணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெபிட் கார்டில் திருமண அழைப்பிதழை அச்சடித்து புதுமையை புகுத்தியுள்ளார் ஒரு இளைஞர்.

திருமணம் என்றாலே அதில் முக்கிய இடத்தை பிடிப்பது அழைப்பிதழ்கள்தான். திருமணமானது சிறப்பாக களைகட்ட அழைப்பிதழ்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கொண்டு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் ஒரு இடத்தில் கூட வைக்கமுடியும்.

அந்த திருமண அழைப்பிதழில் புதுமை செய்யும் அந்த திருமணத்துக்கு எதிர்பார்ப்பு என்று வலுக்க தொடங்கும். தற்போது திருமணங்களில் பல்வேறு வகையான புதுமைகளை புகுத்தி வருகின்றன.

தாம்பூல பை

தாம்பூல பை

தாம்பூல பைகளில் வைக்கப்படும் தேங்காய், பழம் ஆகியவற்றுக்கு பதிலாக மரம் நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர். இன்னும் சிலரோ புத்தகங்களையும் தாம்பூலமாக வழங்குகின்றனர்.

புதுமையானது

புதுமையானது

அதேபோல் திருமண அழைப்பிதழ்களை பொருத்தவரை குறைந்த விலையிலிருந்து அதிக விலை வரை நம் வசதிக்கேற்ப அடித்துக் கொள்ளலாம். அதிலும் புதுமைகளை புகுத்தி வருகின்றனர்.

பெரிய சைஸ் தேவையில்லை

பெரிய சைஸ் தேவையில்லை

திருமண அழைப்பிதழ் என்றாலே பெரிய சைஸில்தான் இருக்க வேண்டுமா என்ன? கைக்கு அடக்கமாக பர்ஸில் வைக்கும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போல் இருந்தால் எப்படி இருக்கும்?

டெபிட் கார்டில் அழைப்பிதழ்

டெபிட் கார்டில் அழைப்பிதழ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெபிட் கார்டு போல் திருமண அழைப்பிதழை அச்சடித்துள்ளார். அதில் முன் பகுதியில் லைப் வங்கி என்றும் கார்டு நம்பருக்கு பதிலாக திருமணம் நடைபெறும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டும் உள்ளார்.

என்னென்ன உள்ளது?...

என்னென்ன உள்ளது?...

அதோடு அந்த கார்டானது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகுமாம். பின்பக்கத்தில் மணமகள், மணமகன் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும், திருமணம் நடைபெறும் இடம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். உங்க வருகையை பற்று வைத்துவிட்டு, இனிய நினைவுகளை எடுத்துச் செல்லுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலக்காட்டில் திருமணம்

பாலக்காட்டில் திருமணம்

இந்த திருமணமானது வருகிற ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. மணமகன் பெயர் ஷஹீம் கான், மணமகள் பெயர் ஆயிஷா ஆகும். இவர்களது திருமணம் பாலக்காட்டில் நடைபெறுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Keralite youth printed his marriage invitation as debit card under the name of Life Bank
Please Wait while comments are loading...