முட்டி போட்டு... தீச்சட்டி ஏந்தி.. தொடரும் பிரார்த்தனைகள்.. 28வது நாளாக சிகிச்சையில் ஜெயலலிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 28 நாட்களாகிறது. தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிமுகவினரின் விதம் விதமான பிரார்த்தனைகளும் தொடர்கின்றன.

முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனை முன்பு பெரும் திரளான அதிமுகவினர் நேற்றும் கூடி விதம் விதமான பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர். முதல்வர் விரைவில் குணம் பெற்றுத் திரும்ப வேண்டி பிரார்த்தித்தனர்.

தொழுகை நடத்தப்பட்டது. தீச்சட்டி ஏந்தியும், கற்பூரம் காட்டியும், முட்டி போட்டு வேண்டியும் விதம் விதமாக பிரார்த்தனை செய்தனர் அதிமுகவினர்.

28வது நாள்...

28வது நாள்...

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 28 நாட்களாகிறது. இதையொட்டி அவர் பூரண குணமடைய வேண்டி அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அப்பல்லோவுக்கு வந்து ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.

ஜான் பாண்டியன்- ராதாரவி...

ஜான் பாண்டியன்- ராதாரவி...

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், இந்திய ஈழ தமிழர் நட்புறவு மைய தலைவர் காசி ஆனந்தன், நடிகர் ராதாரவி, அதானி குழும நிர்வாகி கரண் அதானி உள்ளிட்டோர் நேற்று அப்பல்லோ வந்து முதல்வசர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றனர்.

சத்குரு சம்ஹார பூஜை...

சத்குரு சம்ஹார பூஜை...

அதிமுக. மகளிரணியினர் அப்பல்லோ முன்பு நேற்று சத்குரு சம்ஹார பூஜை நடத்தினர். அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நேற்று காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் உணவு உண்ணாமல் வேண்டுதலில் ஈடுபட்டனர். இன்னும் 2 நாட்களுக்கு இதே வேண்டுதல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.

முட்டி போட்டு பிரார்த்தனை...

முட்டி போட்டு பிரார்த்தனை...

மதுரையை சேர்ந்த கண் பார்வையற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் முட்டிபோட்டு, ஜெயலலிதா பூரண குணமடைய பிரார்த்தனை மேற்கொண்டனர். அதிமுக தொண்டர்கள் பலர் தங்களது கைகளில் கற்பூரம் ஏற்றி உருக்கமாக வழிபட்டனர்.

தீச்சட்டி ஏந்தி...

தீச்சட்டி ஏந்தி...

திருவள்ளூரை சேர்ந்த அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் சி.கோபாலகிருஷ்ணன் என்பவர் கையில் தீச்சட்டி ஏற்றி பிரார்த்தனை செய்தார். அதிமுக தொண்டர்களின் குழந்தைகள் சிலர் அப்பல்லோ முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை மேற்கொண்டனர்.

சிகிச்சைகள் தொடர்கின்றன...

சிகிச்சைகள் தொடர்கின்றன...

இதற்கிடையே முதல்வருக்கு சிகிச்சைகள் தொடர்கின்றன. ஆனால் அதுகுறித்து அப்பல்லோ எந்த அறிக்கையையும் சமீப நாட்களாக வெளியிடாமல் உள்ளது.

பெண் பிசியோதெரப்பிஸ்டுகள்...

பெண் பிசியோதெரப்பிஸ்டுகள்...

முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டதை தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள் சென்னை வந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக அவர்கள் சிகிச்சை அளித்தனர். நேற்றும் பிசியோதெரப்பி சிகிச்சை தொடர்ந்தது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி இரவு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The ADMK cadres are continuously performed special pooja for Jayalalithaa's speedy recovery, as she is hospitalised for 27 days.
Please Wait while comments are loading...