For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"இனவெறி" யுத்தத்தில் மத்திய அரசு.. மே 17 இயக்கம் கொந்தளிப்பு... 14ல் சாஸ்திரி பவன் முற்றுகை!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து சென்னை சாஸ்திரிபவனை வரும் 14-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

காவேரி மீதான தமிழர்களின் உரிமையை பறிக்கும் கர்நாடக அரசிற்கு ஆதரவாகவும், தமிழர்கள் மீது கர்நாடக அரசு நடத்தும் இனவெறி தாக்குதலை தடுக்காமல் மறைமுகமாக ஊக்குவித்தும், தமிழர்களின் வளங்களான நிலக்கரி, பெட்ரோலியத்தினை கொள்ளையடித்தும் தமிழர்கள் மீது இனவெறி யுத்தத்தினை நடத்தும் இந்திய அரசை கண்டித்து முற்றுகைப் போராட்டம்.

தமிழின விரோத செயல்

தமிழின விரோத செயல்

தமிழர்களின் உரிமையை, வாழ்வாதாரத்தை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்திய மோடி அரசும், துணை செய்யும் காங்கிரசும் சனநாயக விரோதமாக, கூட்டாட்சி விரோதமாக , தமிழின விரோதமாக செயல்படுவதை கண்டிப்போம், அம்பலப்படுத்துவோம்.

இணைந்து போரடுவோம்

இணைந்து போரடுவோம்

சுயமரியாதை மிக்க தோழர்கள் அனைவரும் கைகோர்த்து போராட்டத்தினை பலப்படுத்த வாருங்கள். போராட்டமே நம் மானத்தை உறுதி செய்யும்.

மானத்தை காப்பாற்ற முடியும்

மானத்தை காப்பாற்ற முடியும்

வாய்ப்பிருக்கும் தோழர்கள் மட்டுமல்ல, வாய்ப்பற்ற தோழர்களும் பங்கேற்க அணி திரளுங்கள். அன்றாடப்பணிகளை விட்டு வெளியேருங்கள். வீதிக்கு வாருங்கள்.

போராட வாருங்கள்

போராட வாருங்கள்

கையாலாகாத இந்திய அரசை கேள்விக்குள்ளாக்குவோம். பாசிச இனவெறி கர்நாடக அரசையும், இந்திய அரசையும் எதிர்த்து போராட களத்திற்கு வாருங்கள்.

இடம் : சாஸ்த்திரி பவன் , சென்னை; தேதி : 14 செப்டம்பர் காலை 10 மணி

இவ்வாறு திருமுருகன் காந்தி அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
May 17 movement leader Thirumurugan Gandhi called to lay siege protest at Shastri Bhavan, Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X