For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. 3 மாணவர்கள் முதலிடம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் காலை 9 மணி அளவில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகுதிப் பட்டியலை வெளியிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடை சேர்ந்த சேர்ந்த ஆதித்யா மகேஷ், திருவையாறை சேர்ந்த விக்னேஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கனகவேல் ஆகியோர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டனர்.

MBBS and BDS entrance exam results are released by minister Vijaya baskar

இதையடுத்து, முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 20ம் தேதி முதல் 35ம் தேதிவரை நடைபெற உள்ளது. விளையாட்டு, மாற்றுத்திறனாளி, ராணுவ கோட்டாவை சேர்ந்தவர்களுக்கு 21ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.

www.tnhealth.org என்ற இணையதளத்திலும், ரிசல்டுகளை பார்க்கலாம். எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசு, தனியார் கல்லூரிகளில் 2,723 இடங்கள் உள்ளன. இதில் அரசு கல்லூரிகளில் 2253 இடங்களும், 397 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு அடிப்படையிலும் கிடைக்கும். தமிழகத்திலுள்ள 6 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 470 இடங்கள் உள்ளன.

பிளஸ் டூ தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த ஆரத்தி இந்த நுழைவு தேர்வில் 10வது இடம் பிடித்துள்ளார்.

English summary
MBBS and BDS entrance exam results are released by minister Vijaya baskar in Chennai on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X