சென்னையில் பயங்கரம்.. ஆங்கில பத்திரிகை ஊழியரை காரில் கடத்தி கழுத்தறுத்து படுகொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஆங்கில பத்திரிக்கையில் பணியாற்றிய ஊழியர் காரில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சிந்தாதிரிபேட்டை ரிச்சி தெரு அருகே உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்தவர் கதிரவன் (47). இவர் ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். கதிரவன் மனைவி அமுதா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், தனது கணவரை அவரின் அக்கா மகளின் கணவர் யூசுப் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து காரில் கடத்திச் சென்றதாகவும், அவர்களால் கதிரவன் கொலை செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், நேற்று முன்தினம் அமுதா சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

வீட்டு தகராறு

வீட்டு தகராறு

கதிரவன் குடும்பத்தோடு வசிக்கும் வீடு கதிரவனின் தந்தைக்கு சொந்தமானதாகும். அந்த வீடு எங்களுக்கு உரிமையானது என்று, யூசுப் தகராறு செய்து வந்தார். ஏனெனில் எனது கணவரின் அக்காள் மகள் ஜெயந்தியை, யூசுப் திருமணம் செய்துள்ளார். அந்த வகையில், வீடு தங்களுக்கே சொந்தம் என யூசுப் கூறிவந்தார். இவ்வாறு புகாரில் அமுதா தெரிவித்திருந்தார்.

கொலை வழக்கு

கொலை வழக்கு

யூசுப் மீது ஐஸ்அவுஸ் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து கதிரவனை தேடவில்லை என்று கூறப்புடகிறது.

கார் பதிவு எண்

கார் பதிவு எண்

அமுதா அவரது கணவரை கடத்திச்செல்ல பயன்படுத்திய காரின் நம்பரையும் போலீசாருக்கு தெரிவித்து இருந்தார். இந்த அடிப்படையில் காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரித்தனர். காருக்கு சொந்தக்காரர் மதுரவாயலை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கதிரவனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காரை போலீசார் மீட்டனர்.

ரத்தக்கறை கார்

ரத்தக்கறை கார்

காரின் உரிமையாளரின் வீட்டில் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காரின் உரிமையாளரும், யூசுப்பும் நண்பர்கள் என்று தெரிகிறது. அவசரத் தேவைக் காக காரை எடுத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு, யூசுப் காரை எடுத்து வந்துள்ளார். பின்னர் காரை அவரே உரிமையாளர் வீட்டில் விட்டிருக்கிறார். காருக்குள் ரத்தக்கறை படிந்திருந்தது தெரியவந்தது. அதைவைத்து பார்க்கும்போது கதிரவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. யூசுப்பும், அவரது நண்பர்களும் தலை மறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வந்தனராம்.

குற்றவாளிகள் கைது

குற்றவாளிகள் கைது

ஆனால் போலீசார் துரிதமாக தேடவில்லை என குற்றம்சாட்டி, கதிரவனின் உறவினர்கள் நேற்று காலையில் சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கதிரவனை கடத்திச் சென்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த யூசுப், அவரது நண்பர்கள் யோகேஷ், கணேசன், ஜெயசிங், பாலசுப்பிரமணியன் ஆகியோரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

மனைவியை பிரித்துவிட்டார்

மனைவியை பிரித்துவிட்டார்

விசாரணையின்போது, கதிரவன் வசிக்கும் வீட்டிற்கு நான் உரிமை கொண்டாடியதால் எனது மனைவியை அவரது தாய் மாமாவான கதிரவன் என்னிடம் இருந்து பிரித்து விட்டார். அதனால்தான் அவரை கடத்திச் சென்று கொலை செய்தேன் என்று யூசுப் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். கதிரவனை படுகொலை செய்து மீஞ்சூர் அருகே பிணத்தை வீசிவிட்டதாக யூசுப் தெரிவித்தார்.

கொடூரமாக கொலை

கொடூரமாக கொலை

மீஞ்சூரை அடுத்த வல்லூர் தனியார் சிமெண்டு கம்பெனி அருகே புதர் பகுதியில் கதிரவனின் பிணத்தை கண்டுபிடித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். சிந்தாதிரிபேட்டை போலீசார் மீஞ்சூர் போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அது கதிரவன் என்பது அடையாளம் தெரிந்தது. கதிரவனின் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மார்பில் ஏகப்பட்ட கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அவரது வலது கையில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. பச்சைக் குத்தப்பட்ட பகுதி நெருப்பால் அழிக்கப்பட்டு சித்ரவதை செய்து கொடுமையாக கதிரவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A day after a Chintadripet resident complained about her husband S Kathiravan going missing, police on Friday recovered his body in Minjur.
Please Wait while comments are loading...