For Daily Alerts
செங்கல்பட்டு அருகே நில அதிர்வு.. மக்கள் அலறியடித்து ஓட்டம்!
காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மஹேந்திரா சிட்டி பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நில அதிர்வால் அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் ஏராளமானோர் வெளியே ஓடிவந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நில அதிர்வு குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!