எவ்வளவு ஐஸ் வைத்தாலும் பழவேற்காடில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படாது.. எம்எல்ஏவுக்கு ஜெயக்குமார் பதில்!
சென்னை: எவ்வளவு ஐஸ் வைத்தாலும் பழவேற்காடில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை கடந்த திங்கள் கிழமை மீண்டும் கூடியது. இதில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய கூட்டத்தின் போது பொன்னேரி எம்எல்ஏ பலராமன், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர் ஜெயக்குமாரை புகழ்ந்து பேசினார். இறுதியில் பழவேற்காட்டில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் ஐஸ் ஃபேக்டரி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
எம்எல்ஏ பலராமன் பேசி முடித்ததும் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்க தொடங்கினார். அப்போது More
எம்எல்ஏ எவ்வளவு ஐஸ் வைத்தாலும் பழவேற்காடில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படாது என்றார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது. ஏற்கனவே அப்பகுதியில் இரண்டு ஐஸ் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பழவேற்காட்டில் புதிதாக ஐஸ் தொழிற்சாலை அமைக்கும் வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!