அதிமுகவின் இரு அணிகளையும் வழிநடத்தவே அமைச்சர்கள் ஆலோசனை... அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் இரு அணிகளையும் ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தேர்தல் ஆணையத்தில் இன்று அதிமுகவின் இரு அணிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டன. இதில் கலந்து கொள்வதற்கு முன்னர் மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Minister Jayakumar says he welcomes OPS's comment

இந்த நிலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 அமைச்சர்கள் 1 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தி வந்தனர். இது குறித்து அமைச்சர் ஜெயகுமார் தெரிவிக்கையில், இந்த கூட்டத்தில் இரு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. ஒன்று, இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது குறித்ததாகும்.

இரண்டாவது இரு அணிகளும் இணைவது குறித்து ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துகளை வரவேற்கிறன். மேலும் டிடிவி தினகரன் குறித்து எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. இது ரகசிய கூட்டம் இல்லை. ஒற்றுமையாக இருப்போம். சசிகலா இல்லாத அதிமுக குறித்து தொண்டர்கள் எடுக்கும் முடிவே இறுதி முடிவு. அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்தது தவறான தகவல் என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar says, we are discussed to get back the twin leaves symbol which was freezed and also about ADMK's team joining.
Please Wait while comments are loading...