ஆட்சியை கலைக்க சதி! ‘அவர்’ ரொம்ப டேஞ்சர்! எச்.ராஜா சொன்னத கவனீச்சீங்களா? நேரு கிளப்பிய பரபரப்பு!
செங்கல்பட்டு : ஜாதி கலவரத்தை உருவாக்கி திமுக ஆட்சியின் மீது கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கோடு பாஜக செயல்படுகிறது எனவும் திமுக அரசைக் கலைக்க பாஜக சதி திட்டம் போடுகிறது என தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
Recommended Video
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று, முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினர்.

அமைச்சர் கே.என்.நேரு
விழாவில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடையே பேசுகையில் ," திமுக அரசைக் கலைக்க பாஜக சதி திட்டம் போடுகிறது விவசாய கடன் தள்ளுபடி செய்தது, கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்தது என்ன மகத்தான சாதனைகளை செய்துள்ளது. ஸ்டாலினை விமர்சனம் செய்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த h ராஜா சொல்கிறார், கலைஞரை விட ஸ்டாலினுக்கு ஆபத்தானவர் என்று.

முதல்வர் ஸ்டாலின்
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஆட்சி எப்படி நடத்துவது ,அதை எப்படி சமாளிப்பது என்று, தெரியாமல் இருந்த காலத்திலேயே திறம்பட செயல்பட்டவர் முதல்வர் ஸ்டாலின். எப்படியாவது ஜாதி கலவரத்தை உண்டு பண்ணி இந்த ஆட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் , பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. சிறு பிரச்சனை கூட பூதாகரமாக மாற்றி கொண்டிருக்கிறது பாஜக .

மகத்தான வெற்றி
அதிக ஆட்கள் எல்லாம் பாரதிய ஜனதா கட்சியில் இல்லை. அதிமுக சற்று கமுக்கமாக இருக்கும் காரணத்தினால், அவர்கள் பெரியதாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் நம்மை ஒன்றும் வென்றுவிட முடியாது. விரைவில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெறும் என தெரிவித்தார்.

ஏராளமானோர் பங்கேற்பு
இவ்விழாவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர செயலாளர் நரேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications