மக்களை குழப்பி பயமுறுத்தக் கூடாது.. ஸ்டாலினுக்கு ஆர்பி உதயக்குமார் அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மக்களை குழப்பும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் ஸ்டாலின் பேசக்கூடாது என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழையால் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீ தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

Minister RP Udhayakumar advising Stalin to do not give wrong information taken steps for flood

இந்நிலையில் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தாழ்வானப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மழை பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மக்களை குழப்பும் வகையிலும் அச்சறுத்தும் வகையிலும் ஸ்டாலின் பேசக்கூடாது என்றும் அவர் கூறினார்.

நியாயமான நடவடிக்கைகளை பாராட்டக்கூட வேண்டாம், எதுவுமே செய்யவில்லை என கூறக்கூடாது என்றார். எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிக்கு அறிவுரைகளை வழங்கலாம் என்றும் அவர் கூறினார்.

சாதாரண மழையால் தண்ணீர் தேங்காது என்ற அவர், கனமழை பெய்ததால் தான் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாக கூறினார். மக்கள் தங்குவதற்கு தேவையான மாற்று இடங்கள் முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister RP Udhayakumar advising Stalin to do not give wrong information taken steps for flood. He said Stalin should not make public confuse and threat.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற