விவசாயிக்கு கடன் தர மறுக்கும் அதிகாரி மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: விவசாயிகள் பயிர்க்கடன் முழுவதையும் கட்டினால் தான் கடன் கொடுக்கப்படும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சொன்னால் அவர்களை நிச்சயம் உயர் அதிகாரிகள் தண்டிப்பார்கள் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

திருச்சியில் பொது விநியோகக் கடையை திறந்து வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அப்போது, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் புகைப்படம் மற்றும் பயனாளிகளின் குறிப்புகள் மாறிவிடுகிறது. எந்த தகவல்களும் மாறாமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Minister Sellur Raju given assurance for loan from cooperative Banks

கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் விவசாயிகளிடன் பயிர்க்கடன் முழுவதையும் கட்டினால் தான் அடுத்த கடன் வாங்கப்படும் என கூறினால் அந்த அதிகாரி மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார். இப்பேட்டியின் போது அமைச்சர் செல்லூர் ராஜூவுடன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உடன் இருந்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sellu raju assured that all farmers will get loan in cooperative bank.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற